கேரள மாநிலம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை, நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த கோழிக்கோடு மாவட்டத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திறப்பதை 12-ம் தேதி வரை அம்மாநில அரசு ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், வரும் 12-ம் தேதி கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளிகள் […]
அண்ணா பல்கலைக்கழகம்,பொறியியல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர முடியாத மாணவர்கள் வரும் 14-ஆம் தேதிக்கு முன் எப்போது வேண்டுமானாலும் உதவி மையத்துக்கு வரலாம் என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக, கடந்த மே 3 முதல் ஜூன் 2-ஆம் தேதி வரையிலான விண்ணப்ப காலத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஜூன் 5 ஆம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழகம் முழுவதும் 42 சேவை மையங்கள் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ,அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக ஏற்கெனவே 250 கோடி ரூபாய் ஒடுக்கபட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 1,789 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் திட்டமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியபின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட சீருடைகள் இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என்றும், இந்தாண்டு ஒரு லட்சம் மாணவர்கள் […]
‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனை அடைந்த கேரள மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பயலூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 42), விவசாயி. இவருடைய மனைவி மல்லிகா (41). இவர்களுடைய மகள் சவுமியா (19). மருத்துவ படிப்பு படிக்க விரும்பிய சவுமியா நடந்து முடிந்த ‘நீட்‘ தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதியிருந்தார். இதில் அவர் தோல்வி அடைந்ததால் கடந்த […]
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 7வது இடம் பிடித்தவர் அலோக் மிஸ்ரா. கடந்த மாதம் 29ம் தேதி லக்னோவில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அலோக் மிஸ்ராவை பாராட்டி, ஒரு லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினார். இதையடுத்து, மிஸ்ராவின் தந்தை அந்த காசோலையை கடந்த 5ம் தேதி வங்கியில் செலுத்தினார். ஆனால், காசோலையில் உள்ள கையெழுத்து பொருந்தவில்லை எனக்கூறி வங்கி காசோலை திருப்பி அனுப்பியது. அத்துடன், […]
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு 18 ஆயிரத்து 524 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர் என கூறியுள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திருநெல்வேலி, மதுரை, கோவை ஆகிய மூன்று பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் படிப்பதற்கான இடங்களை அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் […]
சென்னை உயர்நீதிமன்றம் ,அரசு கல்லூரி ஆய்வுக்கூட உபகரணங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், முன்னாள் கல்லூரி கல்வி இணை இயக்குநர் உள்ளிட்ட 5 பேரின் தண்டனையை உறுதி செய்துள்ளது. 1995ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த முறைகேட்டால் அரசுக்கு 56 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கல்லூரி கல்வி இணை இயக்குநர் காசிநாதன், அதிகாரி பெருமாள் மற்றும் திருப்பதிராஜ், கார்மேகம், கோவிந்தராஜன் ஆகியோர் மீதான வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், கடந்த 2007ஆம் ஆண்டு காசிநாதனுக்கு […]
கர்நாடக மாநில மந்திரிசபையில் கடந்த 6-ம் தேதி 25 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். இந்த மந்திரிசபையில் உயர்கல்வித்துறை மந்திரியாக ஜி.டி. தேவேகவுடா (முன்னாள் பிரதமர் எச்.டி. தேவேகவுடா அல்ல) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல் மந்திரி சித்தராமைய்யாவை சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்கடித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரான ஜி.டி. தேவேகவுடா, எட்டாம் வகுப்பு வரை படித்தவர் என்பதால் கல்வித்துறை சார்பில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய உயர்கல்வித்துறை மந்திரி பதவியை இவருக்கு அளித்தது தொடர்பாக முதல் மந்திரி […]
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சோனாபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் திவ்யா (வயது 17) . இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 வணிகவியல் பிரிவு படித்தார். பிளஸ் 2 தேர்வை ஆர்வமுடன் எழுதியிருந்த திவ்யா கணக்குப்பதிவியல் பாடத்தில் தனக்கு அதிகமார்க் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் 200-க்கு 124 மதிப்பெண்களே அவருக்கு கிடைத்தது. பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல்களை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து பார்க்கும் வசதி […]
தமிழகம் முழுவதும் உள்ள உரிமையியல் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 320 நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இன்று Preliminary எனப்படும் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. வழக்கறிஞர்களாக பதிவு செய்த அனைவரும் இந்த தேர்வை எழுதலாம் என்பதால், மாநிலம் முழுவதும் காலையில் 10 மணிக்கு தொடங்கிய தேர்வை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். இதில், வெற்றிபெறுவோருக்கு, […]
நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பீகாரின் கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33ஆம் இடம் பெற்றுள்ளார். நீட் தேர்வில் இந்திய அளவில் 12 ஆம் இடம் பிடித்த தமிழகத்தின் கீர்த்தனா ஜிப்மரில் 5 ஆம் இடம் பெற்றுள்ளார். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. ஜிப்மர் மருத்துவக்கல்லூரியின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிளையில் உள்ள 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு ஜூன் -3ம் தேதி நடைபெற்றது. 1 […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,திருப்பூர் போன்ற பெரிய நகரங்களில் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு ஏற்றுமதி, ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் போன்ற 12 தொழிற்பயிற்சிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதுவள்ளியாம்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலத்தை சரளமாக கற்றுத் தர இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து சுமார் 600 பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வேலை இல்லாத காரணத்தினால் டெல்லி ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் ஒருவர் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்த அன்ஷுமன் ((Anshuman)) டெல்லி ஐ.ஐ.டி.யில் பி.டெக் படித்தவர். 31 வயதாகியும் வேலையில்லாததால் இவர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் 7-வது மாடியில் இருந்து குதித்த இவர் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் பீகாரில் சில மாணவர்களுக்கு சில பாடங்களில் மொத்த மதிப்பெண்ணைவிட அதிக மதிப்பெண் வழங்கியிருப்பதும், தேர்வே எழுதாத ஒருசிலருக்கு மதிப்பெண்கள் வழங்கியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் பள்ளித் தேர்வு வாரியம் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 53விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் கொள்குறி வினாவிடைப் பகுதியில் மொத்த மதிப்பெண்ணான 35க்குப் பதில் சில மாணவர்களுக்கு 37, 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் உயிரியல் பாடத்தில் தேர்வெழுதாத மாணவிக்கு […]
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவக்கல்லூரியின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிளையில் உள்ள 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு ஜூன் -3ம் தேதி நடைபெற்றது. 1 லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் எழுதிய இந்த நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் வெற்றி பெற்றோருக்கான கலந்தாய்வு ஜூன் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் […]
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு, சிபிஎஸ்இ பள்ளிக் குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்க நீதித்துறை மூலம் தீர்வு காணும்படி கேரளாவை சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். சராசரியாக 28 கிலோ உடல் எடை கொண்ட நான்காம் வகுப்பு மாணவன், அவனது உடல் எடையில் 20 சதவீதத்தை அதாவது ஐந்தரை கிலோவை தினமும் பள்ளிக்கு சுமந்து செல்வதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாவது புத்தகப் பையை சுமக்க நேரிடுவதால், குழந்தைகளின் உடல்வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் கடிதத்தில் […]
மாணவர்கள் 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிலையில் பெயர்ப்பட்டியல் திருத்தங்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர் பெயர், தலைப்பெழுத்து, பிறந்த தேதி, பள்ளியின் பெயர் உள்ளிட்ட திருத்தங்களுக்கு தேர்வுக்கு முன்பே பலமுறை வாய்ப்பு வழங்கப்பட்டதாக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட்ட நிலையில் திருத்தங்கள் தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்து அணுகிவருவதாக கூறப்பட்டுள்ளது. தொடர்புடைய பள்ளிகள் மாணவர் குறித்த திருத்தங்களை தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிட்டு முதன்மைக் கல்வி அலுவலரிடம் […]
சென்னை உயர்நீதிமன்றம்,நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில், எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 13 லட்சம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவஹர் சண்முகம் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதில், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் இளங்கலை மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களிடம் வசூலிப்பதாக அவர் முறையிட்டிருந்தார். இந்த வழக்கு […]