10ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் சேர்க்கையை மறுக்கக்கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 10ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கட்டாய மாற்றுச்சான்றிதழும் தரக்கூடாது .11ம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களை 12ம் வகுப்பில் பயில அனுமதித்து சிறப்புப்பயிற்சி அளிக்க வேண்டும் .குறைந்த மதிப்பெண் எடுத்த, தோல்வியுற்ற மாணவர்களை ஊக்குவித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் ர்ன்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.மாணவர்கள் யாரும் தற்கொலை […]
இந்திய அளவிலான தகுதித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையிலும் , மாணவர்களின் பல்வேறு திறன்களை மேம்படுத்தவும்,கல்வி முறையை மேம்படுத்த தொழில்நுட்ப உதவிகளைப் பெறும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.யுடன் பள்ளிக் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் சென்னை ஐ.ஐ.டி. மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்கக அதிகாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வை இந்தாண்டு முதல் இணையதளம் மூலம் நடத்துகிறது. இந்த ஆண்டு 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுக்கான ரேண்டம் கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 42 இணைய சேவை மையங்களில் இன்று தொடங்கியுள்ள சான்றிதழ் சரிப்பார்ப்புப் பணிகள் வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.மாணவர்கள் இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகல், 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பிளஸ் 2 […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி அமைத்து அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் நூலகங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், அதனை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பழுதடைந்த நூலகங்கள் அனைத்தும் சீரமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நூலகங்களில் ஐ ஏ […]
அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆய்வு செய்ய சென்ற கலெக்டர் ராமன் பள்ளி வகுப்பறையில் மாணவரை போன்று அமர்ந்து, ஆசிரியை பாடம் நடத்துவதை கவனித்தார் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் பின்தங்கியே உள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. எனவே நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாணவ, மாணவிகளின் கற்றலில் கூடுதல் கவனம் செலுத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 36 […]
இந்தியாவின் 3 கல்வி நிறுவனங்கள் உலகின் மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த கியூ.எஸ். என்ற நிறுவனம், உலக அளவில் சிறந்த விளங்கும் பல்கலைக்கழகங்களை ஆண்டுதோறும் வரிசைபடுத்தி வருகிறது. அதன்படி, இந்த தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில், அமெரிக்காவின் மாசாசூட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 7வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதேநேரத்தில், ஐஐடி மும்பை 162வது இடத்திலும், பெங்களூர் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 170வது இடத்திலும், ஐ.ஐ.டி. டெல்லி 172 இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ஐ.ஐ.டி. […]
விருதுநகர் நீதிமன்றம் ஆய்வு செய்வதற்காக, பேராசிரியர் நிர்மலா தேவியின் குரல் மாதிரியை மதுரை மத்திய சிறையில் வைத்தே பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், தற்போது நிர்மலா தேவி சிறையில் உள்ளார். செல்போன் மூலம் மாணவிகளிடம் பேசியது நிர்மலா தேவிதான் என்பதை உறுதிப்படுத்த குரல் மாதிரியை பதிவு செய்து ஆய்வு செய்ய செய்வதற்காக அவரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி […]
வரும் 19-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் விழா நடைபெறும் என்றும் ஆய்வு மாணவர்கள் மற்றும் முழுநேர பி.இ., பி.டெக்கில் படிப்புகளில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு விழாவில் பட்டங்கள், தங்கப் பதக்கங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் பல்கலைக்கழக இணையதளமான www.annauniv.eduவில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் கல்லூரிகளை தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. […]
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,மேல்நிலை பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று இது தொடர்பான சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேலின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்கவும், புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மாணவர்கள் 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும் செய்திகளுக்கு […]
“திரும்பவும் ஒரு தோல்வியைத் தாங்கும் சக்தி இல்லை. எத்தனை முறைப்பா நான் தோல்வியைத் தாங்குவேன்” என்று தந்தைக்கு உருக்கமாகக் கடிதம் எழுதிவைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளார் மாணவி பிரதீபா. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரதீபா. ப்ளஸ் டூ தேர்வில் பிரதீபா 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நீட் தேர்வில் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மனமுடைந்த அவர், எலி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை அடக்கம் செய்ய அவரின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து […]
மத்திய அரசு நாடு முழுவதும் 70 தனியார் மற்றும் 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடைவிதித்துள்ளது. இதனால் மொத்தமுள்ள 64 ஆயிரம் மருத்துவக் கல்விக்கான இடங்களில் பத்தாயிரம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாது. இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரைகளின்படி இத்தடை உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கல்லூரிகளுக்கு அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தியதன் அடிப்படையில், 82 மருத்துவக் கல்லூரிகளில் 2018-19ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் […]
நேற்று இரவு திருச்சி அருகே, நீட் தேர்வில் தோல்வியடைந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி அருகே உள்ள நெ.1 டோல்கேட் உத்தமர்கோவில் திருவள்ளூவர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் வி. கண்ணன். இவருடைய மகள் சுபஸ்ரீ (17). துறையூர் சௌடாம்பிகா பள்ளியில் பிளஸ் 2 படித்த சுபஸ்ரீ 907 மதிப்பெண் எடுத்திருந்தார். இதையடுத்து மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுந்தியிருந்தார். இந்நிலையில் அண்மையில் வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவில் […]
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ,அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சி.ஏ. படிப்பு சார்ந்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் என்று கூறினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியது, நீட் தேர்வில் 2017-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 73 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் 28 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்தனர். 2018-ம் ஆண்டில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர் தேர்வு எழுதியதில் 45,336 பேர் (40 சதவீதம்) தேர்ச்சி […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,வெயிட்டேஜ் மதிப்பெண் இல்லாமல், அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வது, பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதன் அவசியம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டுவந்தது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, ஆசிரியர் தகுதி தேர்வில் உள்ள வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், வெயிட்டேஜ் மதிப்பெண் இல்லாமல், ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு […]
நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மாணவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் […]
ஐதராபாத்தில் மாணவி ஒருவர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஐதராபாத் அருகே உள்ள கச்சிக்கூடா என்னுமிடத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி வணிக வளாகம் ஒன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்பதாவது தளத்தில் இருந்து குதித்த மாணவி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற விரக்தியால் […]