டெல்லி டிராக்டர் வன்முறையில் பாதிக்கப்பட்ட போலீசார் மற்றும் குடும்பத்தினர் போராட்டம்!

விவசாயிகள் போராட்டத்தின் போது குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டெல்லி டிராக்டர் வன்முறையில் பாதிக்கப்பட்ட போலீசார் மற்றும் குடும்பத்தினர் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாகா டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். அகிம்சை முறையில் நடைபெற்ற இந்த போராட்டம் குடியரசு தினத்தன்று வன்முறையாக சிங்கு எல்லையில் வெடித்தது. இதில் விவசாயிகளும், காவலர்களும் காயமடைந்து பாதிக்கப்பட்டனர்.
சில விவசாயிகள் வாள் வைத்து சண்டையில் காவலர்களை தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இன்று டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த காயமடைந்த காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கூறுகையில் விவசாயிகள் பலர் வாழ் வைத்து தங்களை தாக்கியதாகவும், இதனால் தான் அதிகப்படியான காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025