24 படத்தின் இரண்டாம் பாகம்.? வெளியான புதிய தகவல்.!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளது.
இந்த படத்திற்காக நடிகர் சூர்யா 30 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் படமும் கைவசம் வைத்துள்ளார்.
இந்த படங்களையெல்லாம் தொடர்ந்து அடுத்ததாக சூர்யா 24 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 24. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருப்பார்.
இதில், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். இந்த நிலையில், தற்போது படத்திற்கான இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா வாடிவாசல் படத்தில் நடித்து முடித்தவுடன் 24-2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!
July 19, 2025
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025