புதிய மாதிரி படத்திட்டமானது 90 சதவீத கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டுவிட்டது.! அமைச்சர் பொன்முடி தகவல்.! 

Minister Ponmudi

தமிழகத்தில் செயல்படும் கல்லூரி பல்கலைக்கழகங்களில் பொதுவான மாதிரி படத்திட்டத்தை தமிழக உயர்கல்வித்துறை அறிமுகடுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் படிக்கும் சமயத்தில் இடையில் வேறு கல்வி நிறுவனத்திற்கு செல்கையில் பொதுவான பாடத்திட்டம் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என அறிமுகப்படுத்தியது. இதில் சுயநிதி கல்லூரிகள் பாதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் இதுவரை 16,516 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.

இதனை அடுத்து, புதிய மாதிரி படத்திட்டம் 90 சதவீத கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டுவிட்டது. கல்வி வளர்ச்சி என்பது எண்ணிக்கையில் மட்டுமே உயர்த்தப்படுவதில்லை. அது அதன் தரத்தை உயர்த்த வேண்டும். நான் முதல்வன் திட்டம் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்தி வருகிறோம். பொது பாடத்திட்டம் கொண்ட புதிய மாதிரி பாடத்திட்டத்தை 90 சதவீத கல்லூரிகளில் அமல்படுத்தபட்டுவிட்டது. மீதம் உள்ள கல்லூரிகள் அடுத்த வருடம் அமல்படுத்துவதாக கூறியுள்ளனர். என அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்