மக்களே..! உங்கள் உடலில் இந்த பிரச்சனைகள் உள்ளதா..? அப்ப கண்டிப்பா இதை பண்ணுங்க..!

heart attack

இன்று நோய் இல்லாதவர்கள் என்று சொல்லப்போனால் மிகவும் குறைவானவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலானோருக்கு உடற்பருமன், இருதய நோய், நீரிழிவு பிரச்சனை, உயர் ரத்த அழுத்த பிரச்சனை என ஏதாவது ஒரு பிரச்சனை காணப்படுகிறது. இந்த பிரச்சனைகள் நமது ஆயுள் நாட்களை குறைப்பதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் தடையாக உள்ளது.

weightloss
weightloss [Imagesource : representative]
இதய நோய்களின் அபாயத்தை குறைக்க முதலில் உடலின் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். அதிக எடை இருப்பவர்கள் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருக்கும். அந்த வகையில் நமது உடலில் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் அதிக கலோரிகளை உட்கொள்வது தான். உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள் கலோரிகள் அதிகமாக உட்கொள்ளுதலை தவிர்க்க வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி சமச்சீரான உணவு போன்றவை  நமது உடலில் கலோரிகளை எளிதில் எரிக்க கூடிய செயல்முறை ஆகும்.

heart attack
heart attack [Imagesource : Representative]
அதிலும் முக்கியமாக இன்று பலரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவது ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தான். இதில் அதிக அளவு கலோரிகள் காணப்படுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்க கூடிய கெமிக்கல்களும் அதில் உள்ளது. உடல் எடை அதிகரிப்பு நமது உடலில் இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை மிகவும் எளிதில் ஏற்படுத்தி விடும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையே பராமரிக்க என்ன செய்ய வேண்டும் 

food eat
food eat [Imagesource : Representative]
  • தினமும் பழங்கள், காய்கறிகள், முழு தானிய பொருட்கள், குறைந்த கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இறைச்சி, மீன் மற்றும் பருப்பு போன்ற உணவுகளை சீரான அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
  • உப்பு மற்றும் சர்க்கரை எடுத்துக் கொள்வதை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும்.
  • காலை உணவை தவறாமல் உண்ண வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேலை சாப்பிடுவது உறுதி செய்து கொள்ளுங்கள்.
  •  உங்களது உணவில், பொறித்த உணவுகளை தவிர்த்து வேக வைத்த உணவுகளை  அதிகமாக சேர்ப்பது ஆரோக்கியமான உணவு முறைக்கு சிறந்தது.
  •  இனிப்புகள் மற்றும் நொறுக்கு தீனிகளை தவிர்த்து விடுங்கள். ஒரு நாளைக்கு 6 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம்

உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான  ஒன்றாகும். பெரியவர்கள் தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடல் எடை, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.

exercise
exercise [Image source :exercise Fit&Well]
குழந்தைகள் ஒரு நாளைக்கு 60 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீங்கள் பயிற்சி செய்யும் போது உங்கள் குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ளவர்களை சேர்த்து கூட்டாக செய்வது நல்லது. குடும்பமாக உட்கார்ந்து தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து, குடும்ப விளையாட்டு மற்றும் உடலுக்கு வேலை கொடுக்கக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறந்தது. கடைகளுக்கு செல்லும் போது  லிப்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக படிக்கட்டுகளில் ஏறி பழக வேண்டும். இது உங்கள் உடலுக்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். எனவே நாம் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கு உணவு மற்றும் நமது அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்