”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நாகை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தில் வெள்ளையாற்றின் முகத்துவாரத்தை பார்வையிட்டு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

EPS -ADMK

சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கலந்துரையாடினார். பின்னர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்களிடம் உரையாடிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, ”4 வருடம் கழித்துத்தான் மக்களைப் பற்றி ஸ்டாலின் சிந்திக்கிறார்.

4 வருடமாக உங்களுடன் ஸ்டாலின் இல்லை. குடும்பத்துடன் ஸ்டாலின் இருந்துள்ளார். இந்த ஆட்சியில் 4 அதிகார மையங்கள், ஸ்டாலின், அவர் மனைவி, மகன், மருமகள் தமிழகத்தை ஆள்கின்றனர். ஆட்சியில் அமரவைத்த பிறகு மக்களைப் பற்றி சிந்திக்காமல், வீட்டு மக்களை சிந்திக்கிறார்.

50 மாதங்களில் நாகையில் ஏதும் பெரிய திட்டத்தை இந்த அரசு கொண்டுவந்ததா? மக்கள் விரும்பும் ஆட்சியை அதிமுகவினர் கொடுத்தோம், அதனால் மக்கள் வரவேற்பு அதிகம் கொடுக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி காவிரி நீர் பெற பாடுபட்டது அதிமுக அரசு. கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தோம்.

திமுக கிடப்பில் போட்டது விவசாய விரோத ஆட்சி மக்களுக்குத் தேவையா? அதிமுக ஆட்சியில் 350 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மருத்துவ கல்லூரி மருத்துவமனையை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கொடுத்தோம். 50 மாத கால திமுக ஆட்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஸ்டாலின் என்ன பெரிய திட்டத்தை கொடுத்தார்?” என்று கடுமையான விமர்சனங்களை மக்கள் மத்தியில் வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்