ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்னும் ஏமாளி அல்ல – எடப்பாடி பழனிசாமி பேச்சு!
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு கட்சிகளும் இறங்கியுள்ள நிலையில். அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள பெரிய கேள்வி என்னவென்றால், அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி” ? என்பது தான்.
ஏனென்றால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “எங்கள் கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய அளவிலும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் மாநில அளவிலும் மக்களின் ஆதரவைப் பெறும் எனவும், தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’ தான். தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி தான், ஆட்சியிலும் பங்கேற்கும் என பேசியிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது.
அமித்ஷா இப்படி கூறியவுடன் இந்த டாப்பிக் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் மாறியது. இந்த சூழலில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், சென்னை ராயபேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சி இல்லை, எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்ககும் என்றுதான் அமித்ஷா சொன்னார். அதனை நீங்கள் புரிந்துகொள்ளாமல் தவறாக புரிந்துகொண்டால் நாங்கள் என்ன செய்வது என பேசி விளக்கம் அளித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் ” ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்னும் ஏமாளி அல்ல. கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம்.2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, தனித்து ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவின் முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை விவரித்து, மக்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாகக் கூறினார். அதிமுக ஆட்சியில் மருத்துவத் துறையில் 11 மருத்துவக் கல்லூரிகள், 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதாக பெருமையுடன் குறிப்பிட்டார். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, அத்திக்கடவு-அவினாசி திட்டம், 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இட ஒதுக்கீடு, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை தமது ஆட்சியின் முக்கிய சாதனைகள் எனக் கூறினார்.
விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடோடி வந்து உதவும் அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் எனவும், திமுக அரசு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தோல்வியடைந்ததாகவும், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்வதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாமகவிலிருந்து 3 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! என்ன காரணம்?
July 20, 2025