குஜராத்தில் முதலமைச்சர் விஜய் ருபானி 800 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். குஜராத்தில் துணை முதலமைச்சர் நிதின் படேல் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. குஜராத்தில் பாஜக பின்தங்கியதையடுத்து பங்கு சந்தைகளில் கடும் சரிவு. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …Dinasuvadu .com
குஜராத் முன்னிலை நிலவரம் மொத்த தொகுதி – 182 காங்கிரஸ் – 85, பாஜக – 80 மற்றவை – 2
குஜராத்தில் மொத்த தொகுதி- 182 முன்னணி நிலவரம்: பாஜக -81, காங்கிரஸ் -74, மற்றவை-4 , ஹிமாச்சல் மொத்த தொகுதி- 68 முன்னணி நிலவரம் பாஜக -21 காங்கிரஸ்-11, மற்றவை-2
கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சுவை ராஜஸ்தானில் போலீசார் கைது செய்தனர். ஆனால் இதற்கு முன்பு இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. கொள்ளையர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டின்போது பெரியபாண்டியை தவறுதலாக சுட்டார் எனவும் அஜாக்கிரதையாக செயல்பட்டு பெரியபாண்டி உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக எப்.ஐ.ஆரை ராஜஸ்தான் காவல்துறையால் பதியப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. இன்று முதல் பக்தர்கள் கூண்டில் அடைபடாமல் ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்கான டோக்கன் பெற ஆதார் கட்டாயம் என கோவில் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
குஜராத், இமாச்சல் சட்டசபை தேர்தல்: குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகின்றன.இந்த தேர்தலில் கணிக்க முடியாத அளவிற்கு பல போட்டிகளும் உள்ளன. மேலும் இத்தேர்தலில் ஆளும்கட்சி கட்சியான பிஜேபி ,எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் அங்குள்ள ஜாதித்தலைவர்கள் ஹர்திக் படேல் ,தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் களம் காணுகின்றனர். இதனால் குஜராத்தின் தேர்தல் முடிவுகளை மொத்த இந்தியாவே எதிர்நோக்கி காத்திருக்கிறது. குஜராத்தில் உள்ள மொத்தம் […]
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவில் புணரமைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் புயல் மற்றும் சீற்றங்களை முன்பே அறிந்து மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் இந்த புயலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். மேலும் கடலோர கிராமங்களின் முழுமையான மேம்பாட்டுக்கு […]
குஜராத்தில் நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் பாஜக மந்திரி ஒருவர் குஜராத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என கருத்து தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள பாஜக எம்.பி சஞ்சய் காகடே கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘குஜராத்தில் பாஜக நீண்ட காலமாக ஆட்சியில் இருப்பது பாஜகவை பாதிக்கும். மேலும், முஸ்லிம் மக்கள் பாஜக நீண்ட காலமாக ஆட்சியில் நீடிக்க விரும்பவில்லை. குஜராத் முதல்-மந்திரியாக மோடி இருக்கும் போது மாநிலத்தின் பிரச்சனைகளை குறித்து கவனம் […]
அசாம் மாநிலத்தில் உள்ள தேமாஜி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு கிலமோரா பகுதியிலிருந்து சுமார் 39 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் லேசாக உணரப்பட்டதால் பொருள் சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.
ஆந்திரா மாநிலத்தில் கடப்பா அருகே ஆயில் டேங்கில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 7 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை
காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது; வாழ்த்துகள் – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.சமீபத்தில் தான் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்களிடம் பெற்ற ஆதார் எண்களை பயன்படுத்தி ஏர்டெல் நிறுவனம் ஏர்டல் பேமென்ட்ஸ் பாங்க் போன்ற வங்கி கணக்குகளை தொடங்கி அதில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ரூ.47 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 23 லட்சம் பேர் ஏர்டல் பெமேன்ட்ஸ் பாங்க் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கி கணக்கில் சமையல் கியாஸ் மானியம் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கும் தெரியாமல் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படாமல், ஏர்டெல் பேமெண்ட்ஸ் பாங்க் கணக்கில் இந்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை […]
காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை போட்டியின்றி தேர்வான ராகுல்காந்தி தனது பரப்புரையில் பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரஸ் தலைவர்கள் பேசியதை தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி பா.ஜனதாவை ஆவேசமாக தாக்கி பேசினார், அவர் பேசியதாவது, ‘பாஜக அரசு தனக்காக மட்டுமே போராடுகிறது. ஆனால் காங்கிரஸ் நாட்டு மக்கள் அனைவருக்கும் சேர்த்து போராடுகிறது. நாட்டின் அனைத்து மூலையிலும் உள்ள மக்களின் விருப்பங்களை அறிந்து செயல்படும் கருவியாக நான் இருக்கவே விரும்புகிறேன். பாஜக நாட்டில் வெறுப்பு அரசியல் மற்றும் மதவாதத்தையும் பரப்பி […]
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தி.மு.க. சார்பில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வார் என்றும், மதசார்பின்மை, சோஷியலிசம் மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றின் பெருமைகளை மீட்டெடுப்பார் என்றும் நம்புகிறேன்.இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கூறியுள்ளார். I congratulate Thiru. Rahul Gandhi on his elevation […]
ஆதாரை பயன்படுத்தி சிம் கார்ட் வழங்க ஏர்டெல்லுக்கு இடைக்கால தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சிம் கார்டுக்கு அளிக்கப்பட்ட ஆதார் தகவலை பயன்படுத்தி ஏர்டெல் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்கியதால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நடவடிக்கை எடுத்ததாகவும் கூறுகிறது மத்திய அரசு.. ஆனால் அம்பானியின் ஜியோ இம்மாதிரியான முறையில் தான் வாடிக்கையாளரிடம் இருந்து ஆதார் தகவல்களை பெற்றுக்கொண்டு சிம் கார்ட்களை வழங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நாளை முன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற இருக்கும் இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நட்சத்திர வீரர் தவான், இந்திய கடைசி ஒருநாள் போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவோம். எங்கள் அணியில் இருக்கும் பலத்தை வைத்து, இந்த உலகில் எந்த ஒரு அணியையும் எதிர்கொண்டு வெற்றி காண முடியும் என்று அவர் கூறினார்.
ஆபாச படங்களில் நடிக்கும் நடிகையான சன்னிலியோன் தற்போது அதுமாதிரியான படங்களில் நடிப்பதை கைவிட்டு விட்டு இப்போது இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.இதனால் இந்தியாவில் அவருகேன்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.இவர் ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். தற்போது இன்னொரு தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். புத்தாண்டு தினத்தையொட்டி வருகிற 31-ந் தேதி இரவு பெங்களூருவில் சன்னிலியோனின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் […]
இந்திய காங்கிரஸ் தலைவாராக ராகுல் காந்தி இன்று முறைப்படி தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று பதவியேற்றார். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராவார். கட்சியின் தலைவர் பொறுப்பை குறிக்கும் சான்றிதழை முல்லப்பள்ளி ராமச்சந்திரன் வழங்கினார். இந்த விழாவில் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு பயங்கரவாதி கன்னிவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளான். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கு பகுதியில் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் ட்ரால் ஈத்கா பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி விபத்துக்குள்ளாகி உயிரிந்தார். இதனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா; கிரிக்கெட் வீரர் ஆனா ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானே 54வயதான . இவர் தன் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாரத விதமாக மஹாராஷ்டிர மாநிலத்தில் இவரது கார் மோதியதில் ஆஷாதய் காம்ப்ளி 67 என்ற பெண் உயிரிழந்தார். இதனால் மதுகர் பாபுராவ் ரஹானே கைது செய்யப்பட்டுள்ளார். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.