காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. காஞ்சிபுரம் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகாந்த் செந்தில். இவர் 2009-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில், ஐஏஎஸ் அதிகாரியாக பதவி வகித்தார். அதன்பின், 2019-ம் ஆண்டு திடீரென பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், இவர் சென்னை சத்திய மூர்த்தி பவனில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் .எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘பாஜகவின் அரசியல் கொள்கை என்பது மக்களிடையே […]
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட தயாராகி வருகிறனர். பொதுவாக திருவிழாக்கள் என்றாலே, நமது நினைவுக்கு வருவது பட்டாசுகளும், புத்தாடைகளும் தான். பட்டாசுகள் இல்லாமல் எந்த விழாவும் கொண்டாடப்படுவதில்லை. இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தில், வெடி வெடிக்கும் போது எதிர்பாராமல் வெடி விபத்துக்கள் ஏற்படுவதுண்டு. இந்த விபத்தால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. […]
பீகார் தேர்தலில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷ்ரோயாஷி சிங் முன்னிலை. பீகாரில் 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அங்குள்ள 55 மையங்களிலும், இன்று காலை 8 மணிக்கு வாக்கு என்னும் பணிகள் தொடங்கியது. துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான ஷ்ரோயாஷி சிங் மறைந்த முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங் மகள் ஆவார். இவர் 4 காமன்வெல்த் போட்டிகளில் தங்க பதக்கமும், ஆசிய போட்டியில் வெண்கல பாதக்கமும் வென்றுள்ளார். […]
தனது ஒரு வயது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் யானை. நம்மில் பலரும் நமது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதுண்டு. ஆனால், இங்கு ஒரு யானை தனது 1 வயது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், ஸ்ரீகுட்டி என்ற யானை, அங்குள்ள கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த யானை பிறந்து ஒரு மாதத்தில் தனது தாயை விட்டு பிரிந்தது. தனது கூட்டத்துடன் சேர முடியாமல் பலத்த காயத்திற்கு […]
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமனையில் அனுமதி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, […]
ட்ரம்பின் தோல்வியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய ட்ரம்பின் மருமகள். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ட்ரம்ப் தோல்வியை தழுவிய நிலையில், அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்டுள்ளார். தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாத ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், ட்ரம்பின் மருமகளான மேரி எல் ட்ரம்பின் ட்வீட்டில், அவரது மாமனாரான ட்ரம்பின் தோல்வியை, ஷாம்பெயின் கோப்பை மற்றும் பைடன், ஹாரிஸ் பெயர்கள் பொறித்த […]
பசுமை பட்டாசுகளை கண்டறிவது எப்படி? நம் அனைவருக்கும், திருவிழாக்கள் என்றாலே, புத்தாடை மற்றும் பட்டாசுகள் தான் நினைவுக்கு வருவதுண்டு. பட்டாசுகள் பயன்படுத்தாமல், எந்த ஒரு பிரபலமான விழாக்களும் கொண்டாடப்படுவதில்லை. இந்நிலையில், கர்நாடகத்தில் தடுக்க, தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க தடை விதித்து, முதல் – மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு இந்து மதத்தினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகள் என்றால் என்னவென்று பலருக்கு தெரியாமல் உள்ளனர். […]
4 வருடங்களுக்கு பின் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் செல்லும் 2 நாய்கள். கடந்த 3-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த கடந்த 4 வருடத்தில், வெள்ளை மாளிகையில், எந்த செல்ல பிராணிகளும் வளர்க்கப்படவில்லை. டிரம்புக்கு முன் 8 ஆண்டுகள் அதிபராக இருந்த ஒபாமா, போச்சுகீசிய நாய்களான, ‘போ’, ‘சன்னி’ என்ற இரண்டு நாய்களை செல்லமாக வளர்த்துள்ளார். அதன் […]
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் 90% வெற்றி. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெர்மனியில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் 90% வெற்றியை பெற்றுள்ளதாக pfizer நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை, ஃபிஃசர் மற்றும் பயோடெக் நிறுவனங்கள் மேற்கொண்டனர். இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, 6 நாடுகளில் 43,500 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தி […]
இந்தியாவில் ட்ரம்பை ஆதரித்த மோடிக்கு ஒரு படிப்பினையாகும். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில், அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், ஜோ பைடன் அவர்கள் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். தோல்வியை தழுவிய ட்ரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து, வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் […]
பீகாரில் நாளை தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை. பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் – காங்கிரஸ்-இடதுசாரிகளின் மகா கூட்டணி, சிராங்க் பசுவானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில், மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலானது, 71 தொகுதிகளில், அக்டொபர் 28 தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், 94 தொகுதிகளில் […]
ஒரே ஒரு போன் காலால் ரூ.9 லட்சத்தை இழந்த நபர். இன்று படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவருமே ஆன்லைனில் உலா வருகின்றனர். இணையத்தை பயன்படுத்தும், படிப்பறிவு இல்லாத சிலர், மோசடி கும்பாலின் வலையில் சிக்கி விடுகின்றனர். இதனால், அவர்கள் பல வகையில் ஏமாற்றப்படுகின்றனர். அந்த வகையில், நாக்பூரில் வசித்து வரும் அசோக் மேன்வெட் என்பவற்றின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை அசோக்கின் 15 வயது மகன் எடுத்து பேசியுள்ளார். அவரிடம் […]
தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு என்னும் பணிகள் மிகவும் இழுபறிக்கு மத்தியில் நடைபெற்ற நிலையில், ஜோ பைடனே இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வான நிலையில், அமெரிக்காவின் டெலாவரில் தனது முதல் வெற்றி உரையை நிகழ்த்தியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து அமெரிக்க மக்களுக்கும் நன்றி. […]
பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள். நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூர் கிராமம் எப்போதுமே பசுமையாக காணப்படுகிறது. இயற்கை எழில் நிறைந்த, இந்த கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் கூட்டமாக வந்து தங்குவது வழக்கம். பெரம்பூரில் உள்ள கிராமங்களில் உள்ள மரங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வேப்பமரம், வேங்கை மரம், ஆலமரம் மாமரங்களில் கூடு அமைத்து வாழ்ந்து வருகிறது. இந்நிலையில், இங்கு […]
பிரதமர் மோடி வாரணாசியில் ரூ.614 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டத்தை தொடக்கி வைக்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில், ரூ.614 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை, காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார். இந்நிகழ்வில், உத்திரபிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் கலந்து கொள்கிறார். மேலும், பிரதமர் மோடி தசாஸ்வமேத் காட் மற்றும் கிட்கியா காட் ஆகியவற்றின் மறுவடிவமைப்புக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், ராம்நகரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை மேம்படுத்தல், கழிவுநீர் தொடர்பான பணிகள், பசுக்களின் […]
பிக்பாஸ்கெட் நிறுவனத்திடமிருந்து திருடப்பட்ட 2 கோடி வாடிக்கையாளர்களின் தகவல். இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கும் பொருட்களின் மீது அதிகம் நாட்டம் காட்டுகின்றனர். இந்நிலையில், பிரபல ஆன்லைன் நிறுவனமான பிக்பாஸ்கெட் நிறுவனம், 18,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளையம், 1,000-க்கும் மேற்பட்ட பிராண்டுகளை கொண்டுள்ளது. இந்நிலையில், பிரபல ஆன்லைன் மளிகைப்பொருள் நிறுவனமான பிக்பாஸ்கெட்டிடமிருந்து, 2 கோடி பயனர்களின் தகவல் திருடப்பட்டுள்ளது. பயனர்களின் பெயர், செல்போன் எண், முகவரி, இணைய முகவரி போன்ற […]
மியான்மர் பொது தேர்தலில், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி முன்னிலை. மியான்மரில் 50 ஆண்டுகால இராணுவ ஆட்சிக்கு பின், 2015-ல் ஜனநாயக ரீதியிலான பொது தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று, மியான்மர் நாடாளுமன்றத்தின் இரு அவைகள், 7 மாநில சட்டப்பேரவைகள் மற்றும் 7 மண்டலங்கள் என 1,171 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு மத்தியில், மக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டுள்ளனர். மிகவும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்ற நிலையில், […]
சாலையை காணவில்லை என அறிவிப்பு பலகை வைத்த பொதுமக்கள். சாத்தூர் மேளகாந்திநகர் பகுதியில், பாதாளசாக்கடை பணிகளுக்காக, சாலைகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பாதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலைகள், குழிகள் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்பகுதியில் ,பெய்த மழையால், சாலையே சேரும், சகதியுமாக காணப்படுகிறது. அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், அப்பகுதி […]
கீரிகள் மூலம் கொரோனா பரவுவதால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கீரிகளை அழிக்க டென்மார்க் நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸை அழிப்பதற்கான அதிகாரபூர்வமான மருந்துகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், டென்மார்க் நாட்டில் மிங்க் கீரிகள் மூலம் […]
5 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 123 காந்தாமணிகள். சீனாவில், 12 வயது சிறுமி மற்றும் 5 வயது சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இருவரும் டிவி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் மூழ்கி போன அந்த சிறுவன், தான் விளையாட்டு பொம்மையில் உள்ள காந்தமணிகளை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கியுள்ளான். இதனையடுத்து, வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம், விளையாட்டு பொம்மையில் இருந்த பந்தை தான் விழுங்கியதாக அவர்களிடம் கூறியுள்ளான். […]