50 KM மைலேஜ் முதல் 140 ஸ்பீடு...இந்த 3 Yamaha பைக்குகளில் எது உங்களுக்கு பெஸ்ட்!

Yamaha MT-15 V2, R15 V4, XSR 155 ஆகிய 155cc பைக்குகளின் மைலேஜ் விலை என அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Hero Image

டெல்லி : இருசக்கர வாகன உலகில் இளைஞர்களின் ஃபேவரிட் பிராண்டான யமஹா (Yamaha), தனது 155cc எஞ்சின் பிளாட்ஃபார்மை வைத்து இந்தியாவிலும் உலக அளவிலும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறது. இந்த கூட்டணியில் இருக்கும் மூன்று பைக்குகளுமே ஒரே மாதிரியான லிக்விட்-கூல்டு, விவிஏ (VVA) எஞ்சின் டிஎன்ஏ-வை (DNA) கொண்டிருந்தாலும், அவை மூன்றும் முற்றிலும் வெவ்வேறான குணாதிசயங்களைக் கொண்டவை.

இதில் யமஹா MT-15 V2 (Yamaha MT-15 V2) ஒரு அக்ரசிவ் சிட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர், யமஹா R15 V4 (Yamaha R15 V4) ரேஸ் டிராக்கிற்கான ஸ்போர்ட்ஸ் பைக், மற்றும் யமஹா XSR 155 (Yamaha XSR 155) பழமையும் புதுமையும் கலந்த ஒரு கிளாசிக் ரெட்ரோ பைக் ஆகும். இந்த மூன்று பைக்குகளில் விலை, மைலேஜ் மற்றும் வசதிகள் என்னென்ன, யாருக்கு எந்த பைக் பெஸ்ட் என்பதை பற்றி பார்ப்போம்.

யமஹா MT-15 V2

யமஹா MT-15 V2 பைக் பார்ப்பதற்கே ஒரு ரோபோட்டிக் மிரட்டல் தோற்றத்துடன், லேசான எடை மற்றும் நிமிர்ந்து நேராக அமர்ந்து ஓட்டும் (Upright) சௌகரியமான ரைடிங் பொசிஷனைக் கொண்டுள்ளது.

வேகம் மற்றும் மைலேஜ் விபரங்கள் : இதில் உள்ள 155cc எஞ்சின் 18.4 PS பவரை வெளிப்படுத்துகிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது. இந்த மூவர் கூட்டணியில் மைலேஜ் விஷயத்தில் இந்த MT-15 V2 தான் டாப். இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வரை சிறந்த மைலேஜை வாரி வழங்குகிறது. எனவே, தினசரி ஆபீஸ் மற்றும் கல்லூரி செல்பவர்களுக்கு இது ஒரு செம பட்ஜெட் பிரண்ட்லி பைக் ஆகும்.

Fidato Future 2020.webp

வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?

இந்த பைக்கில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட முழு டிஜிட்டல் எல்சிடி (LCD) இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை உள்ளது. இதன் மூலம் போன் கால்கள் மற்றும் மெசேஜ் அலர்ட்டுகளை வண்டியிலேயே பார்த்துக்கொள்ளலாம். பாதுகாப்புக்காக டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து டூயல் சேனல் ஏபிஎஸ் (ABS) பிரேக்கிங் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

யமஹா R15 V4

யமஹா R15 V4 பைக் முற்றிலும் பந்தயக் களத்துக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஃபுல்-ஃபேரிங் (Fully-faired) சூப்பர்பைக் மாடலாகும். குனிந்து படுத்து ஓட்டும் அக்ரசிவ் ஸ்போர்ட்ஸ் பொசிஷன் இதன் தனித்துவமாகும்.

வேகம் மற்றும் மைலேஜ் விபரங்கள் : அதிவேகத்தைப் பொறுத்தவரை இந்த கூட்டணியிலேயே இந்த பைக்தான் ராஜா.இது அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகம் வரை சீறிப்பாயும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரை கிடைக்கும். ஆனால், வண்டியை மிகவும் வேகமாக ஓட்டினால் மைலேஜ் சற்று குறைய வாய்ப்புள்ளது.

Yamaha R15 V4.webp

வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?

தொழில்நுட்பத்தில் இந்த பைக் மிகவும் அட்வான்ஸ்டு ஆனது. இதில் ப்ளூடூத் எல்சிடி திரை மட்டுமன்றி, கியர் மாற்றுவதை இன்னும் வேகமாகவும் ஸ்மூத்தாகவும் மாற்றும் குவிக் ஷிப்டர் (Quick Shifter) வசதி டாப் வேரியண்ட்களில் உள்ளது. மேலும், இதில் சிட்டி மற்றும் டிராக் (Street & Track) என இரண்டு ரைடிங் மோடுகள், டிராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என எக்கச்சக்க ரேசிங் ஃபீச்சர்கள் நிறைந்துள்ளன.

யமஹா XSR 155

யமஹா XSR 155 பைக், மாடர்ன் எஞ்சின் தொழில்நுட்பத்தை ஒரு பழமையான (Retro-modern) நேர்த்தியான டிசைனில் வழங்குகிறது. வட்ட வடிவ எல்இடி முகப்பு விளக்கு, கிளாசிக் பெட்ரோல் டேங்க் மற்றும் எளிமையான தோற்றம் இதற்கு சாலையில் ஒரு தனி மரியாதையைத் தருகிறது.

வேகம் மற்றும் மைலேஜ் விபரங்கள் : இந்த பைக் மணிக்கு அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது. இதன் சொகுசான மற்றும் நிதானமான ஓட்டுதல் முறை காரணமாக, இது லிட்டருக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரை ஒரு நிலையான மைலேஜை வழங்குகிறது.

Yamaha XSR 155.webp

வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?

இது அதிகப்படியான எலக்ட்ரானிக் வசதிகளைக் கொண்டு ரைடரைக் குழப்பாமல், தேவையான அனைத்து விபரங்களையும் காட்டும் ஒரு வட்ட வடிவ டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் மிகவும் சிம்பிளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சொகுசான சீட்டிங் அமைப்பு லாங் ரைடு செல்வதற்கும், ஸ்டைலாக வலம் வருவதற்கும் கச்சிதமாகப் பொருந்தும்.

யாருக்கு எது பெஸ்ட்?

இப்போது பைனல் முடிவுக்கு வருவோம். ஒரே எஞ்சினைக் கொண்ட இந்த மூன்று வாகனங்களில் உங்களுடைய தேவைக்கு எது பெஸ்ட் என்று பார்ப்போம்.உங்களுக்கு காலேஜ், ஆபீஸ் போன்ற தினசரி சிட்டி பயன்பாட்டிற்கு டிராஃபிக்கில் வளைத்து நெளித்து ஓட்டக்கூடிய, அதே சமயம் 50 கிமீ வரை மிகச்சிறந்த மைலேஜ் தரும் ஒரு மாஸ் ஸ்ட்ரீட் பைக் வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு யமஹா MT-15 V2 மாடலைத் தேர்வு செய்யலாம்.

உங்களுக்கு மைலேஜை விட டாப் ஸ்பீடுதான் முக்கியம், குவிக் ஷிப்டர், ரைடிங் மோடுகள் போன்ற அதிநவீன ரேசிங் தொழில்நுட்பங்களுடன் மின்னல் வேகத்தில் செல்லும் ஒரு பக்கா ஸ்போர்ட்ஸ் பைக் வேண்டும் என விரும்பினால், உங்களுக்கான ஒரே சாய்ஸ் யமஹா R15 V4 மட்டும்தான்.

ஆனால், எனக்கு வேகம், ரேசிங் லுக் இதெல்லாம் வேண்டாம், எனக்கு ஓட்டுவதற்கு மிகவும் சௌகரியமாகவும், ராயல் என்பீல்டு பைக்குகள் போல நல்ல ரெட்ரோ கிளாசிக் ஸ்டைலிலும், அதே சமயம் யமஹாவின் அதிநவீன எஞ்சின் நம்பகத்தன்மையுடனும் ஒரு வித்தியாசமான பைக் வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு யமஹா XSR 155 தான் மிகச்சிறந்த பெஸ்ட் சாய்ஸ்.