டெல்லி : இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் அவதிப்படும் நடுத்தர மக்கள், தற்போது தினசரி உள்ளூர் தேவைகளுக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனர். ஒரு காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றாலே லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது.
உங்கள் பட்ஜெட் சுமார் 60,000 ரூபாய் என்ற அளவில் இருந்தால், உங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் வகையில் யுலு வின் (Yulu Wynn), கோமகி எக்ஸ் ஒன் (Komaki X One) மற்றும் ஓலா எஸ்1 இசட் (Ola S1 Z) ஆகிய மூன்று முற்றிலும் வெவ்வேறான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த மூன்றில் என்னென்ன சிறப்புகள் உள்ளன, யாருக்கு எது பெஸ்ட் என்பதை பார்ப்போம்.
யுலு வின் (Yulu Wynn)
யுலு வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் எளிமையான, லேசான எடை கொண்ட ஒரு கச்சிதமான வாகனமாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ,55,555 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி மற்றும் மைலேஜ் விபரங்கள் : இதில் 0.98 kWh திறன் கொண்ட சிறிய பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 250W பிஎல்டிசி (BLDC) மோட்டார் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்கூட்டரை ஒரே ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 68 கிலோமீட்டர் வரை மைலேஜ் (Claimed Range) தரும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு வெறும் 25 கிமீ மட்டுமே. எனவே, இது ஒரு லோ-ஸ்பீடு (Low-speed) ஸ்கூட்டர் ஆகும்.
வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?
இந்த வண்டி அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால், கூட்ட நெரிசலான தெருக்களிலும், குறுகிய பார்க்கிங் இடங்களிலும் கையாள்வது மிகவும் எளிது. இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், மொபைல் ஆப் கனெக்டிவிட்டி, சாவி இல்லாத கீலெஸ் இக்னிஷன், ஓடிஏ (OTA) அப்டேட்டுகள், எல்இடி லைட்டுகள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் போன்ற வசதிகள் உள்ளன. இதில் பெரிய அளவில் சீட் ஸ்டோரேஜ் வசதி இல்லை என்றாலும், உள்ளூர் காய்கறி கடை, கல்லூரி அல்லது அருகில் இருக்கும் கடைகளுக்குச் சென்று வர இது மிகவும் வசதியானது. இது தமிழ்நாட்டில் உள்ள யுலு எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
கோமகி எக்ஸ் ஒன் (Komaki X One)
விலையில் எக்கச்சக்க வேரியண்ட்களை அள்ளி வழங்குவதில் கோமகி நிறுவனம் எப்போதுமே முன்னணியில் இருக்கும். அந்த வரிசையில் கோமகி எக்ஸ் ஒன் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை அதன் பேட்டரி ஆப்ஷனைப் பொறுத்து ரூ.34,999 முதல் ரூ.59,999 வரை மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.
பேட்டரி மற்றும் மைலேஜ் விபரங்கள் : வாடிக்கையாளர்கள் தங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப இதன் பேட்டரியைத் தேர்வு செய்து கொள்ளலாம். இதன் ஆரம்ப மாடலான கிராபீன் (Graphene) பேட்டரி வேரியண்ட் 60 கிமீ மைலேஜ் தருகிறது. இதன் 1.5 kWh மாடல் 70 கிமீ மைலேஜும், 1.75 kWh மாடல் 85 கிமீ மைலேஜும், எக்ஸ் ஒன் பிரைம் (Prime) மாடல் 100 கிமீ மைலேஜும் தருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் டாப் மாடலான எக்ஸ் ஒன் ஏஸ் (Ace) வேரியண்ட்டில் 2.2 kWh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது சிங்கிள் சார்ஜில் 150 கிலோமீட்டர் வரை அசாத்திய மைலேஜ் வழங்குகிறது. இந்த 2.2 kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே ஆகும்.
வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?
இந்த ஸ்கூட்டரில் வீட்டுச் சாமான்கள் மற்றும் பைகளை வைப்பதற்காக 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட அண்டர்-சீட் பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வசதிகளாக ஸ்மார்ட் டிஜிட்டல் டேஷ்போர்டு, கீலெஸ் என்ட்ரி, ரிவர்ஸ் அசிஸ்ட், பார்க்கிங் அசிஸ்ட், ரிப்பேர் ஸ்விட்ச் மற்றும் திருட்டைத் தடுக்கும் ஆன்டி-தெஃப்ட் அலார வசதிகள் இதில் உள்ளன. இந்த வண்டி தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சி போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் உள்ள கோமகி டீலர்ஷிப் ஷோரூம்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
ஓலா எஸ்1 இசட் (Ola S1 Z)
ஓலா நிறுவனம் தனது எஸ்1 இசட் மாடலை நடுத்தர மக்களுக்காக அறிமுகப்படுத்தினாலும், இதன் தற்போதைய அதிகாரப்பூர்வ விலை 60,000 பட்ஜெட்டை விட சற்று கூடுதலாகவே உள்ளது. இதனுடைய 3.1 kWh பேட்டரி கொண்ட ஆரம்ப மாடல் அறிமுக சலுகை விலையாக ரூ.79,999 எக்ஸ்-ஷோரூம் விலையிலும், இதன் 5.1 kWh பெரிய பேட்டரி கொண்ட மாடல் ரூ. 99,999 விலையிலும் விற்கப்படுகிறது.
எனவே, இது 60,000 பட்ஜெட்டுக்குள் நேரடியாக வராவிட்டாலும், ஓலா பிராண்டில் அதிக மைலேஜ் தேடுபவர்கள் கொஞ்சம் பட்ஜெட்டை உயர்த்தினால் இந்த வண்டியை வாங்கலாம்.
பேட்டரி மற்றும் மைலேஜ் விபரங்கள் : இதன் 3.1 kWh பேட்டரி கொண்ட மாடல் சிங்கிள் சார்ஜில் 179 கிலோமீட்டர் வரை அசாத்திய மைலேஜ் (IDC Range) வழங்குகிறது. அதே சமயம் இதனுடைய பெரிய 5.1 kWh பேட்டரி மாடல் இன்னும் கூடுதல் மைலேஜை வாரி வழங்குகிறது.
வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?
ஓலா எஸ்1 இசட் மாடலில் ஓலா நிறுவனத்தின் பிரத்யேக ஓஎஸ் (OS) கனெக்டிவிட்டி, டிஜிட்டல் டிஸ்ப்ளே திரை, மல்டிபிள் ரைடிங் மோடுகள் மற்றும் கார் போன்ற மாடர்ன் லுக் கொடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற நெடுஞ்சாலைகளிலும் நல்ல வேகத்தில் செல்வதற்கேற்ப இதன் எலக்ட்ரிக் மோட்டார் பவர்ஃபுல்லாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் தமிழ்நாட்டின் அனைத்து ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களிலும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் விற்பனைக்குக் கிடைக்கிறது.
இந்த மூன்றில் யாருக்கு எது பெஸ்ட்?
இப்போது பைனல் முடிவுக்கு வருவோம். இந்த மூன்று ஸ்கூட்டர்களில் யாருக்கு எந்த வண்டி மிகச்சரியான தேர்வாக இருக்கும் என்று பார்ப்போம்.உங்களது தினசரி பயணம் வெறும் 5 முதல் 10 கிலோமீட்டர் மட்டுமே, எனக்கு வண்டியை ஓட்டுவதற்கு அதிக வேகம் தேவையில்லை, அருகில் இருக்கும் கல்லூரி அல்லது கடைகளுக்குச் சென்று வர ஒரு எளிமையான மற்றும் லேசான எடை கொண்ட வண்டி போதும் என்று நினைத்தால் நீங்கள் தாராளமாக யுலு வின் (Yulu Wynn) மாடலைத் தேர்வு செய்யலாம்.
ஆனால், உங்களது பட்ஜெட் மிகக் கச்சிதமாக 60,000 ரூபாய்க்குள்ளேயே இருக்க வேண்டும், அதே சமயம் வண்டியில் நல்ல சீட் ஸ்டோரேஜ் வசதியும், 100 முதல் 150 கிமீ வரை அதிகப்படியான மைலேஜ் தரும் பேட்டரி ஆப்ஷன்களும் வேண்டும் என்று ஆசைப்பட்டால், உங்களுக்கு கோமகி எக்ஸ் ஒன் (Komaki X One) தான் மிகச்சிறந்த பெஸ்ட் சாய்ஸ். குறைந்த விலையில் அதிக லாபம் தரும் சிறந்த ஆல்-ரவுண்டர் வண்டி இதுவாகும்.
ஒருவேளை, உங்களால் பட்ஜெட்டை 60,000 ரூபாயில் இருந்து இன்னும் ஒரு 20,000 ரூபாய் வரை கூடுதலாக உயர்த்த முடியும் (சுமார் ரூ.79,999) என்றால், நீங்கள் தாராளமாக ஓலா பிராண்டின் தரம், மாடர்ன் லுக் மற்றும் 179 கிமீ மைலேஜ் கொண்ட ஓலா எஸ்1 இசட் (Ola S1 Z) மாடலைத் தேர்வு செய்யலாம்.
