வரலாறு காணாத உயர்வை கண்டுள்ள இந்திய பங்குச்சந்தை!

Indian stock market

Indian stock market : இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவை கண்ட நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செஸ் மற்றும் நிஃப்டி உயர்வை கண்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக நஷ்டத்தில் இருந்த முதலீட்டாளர்கள் தற்போது பெரும் நிம்மதியாக உள்ளனர்.

Read More – Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ..! எவ்வளவு தெரியுமா ..?

இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண் 1.4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அதன்படி, நண்பகல் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. அதாவது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1073.72 புள்ளிகள் உயர்ந்து, 73,574 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Read More – Petrol Diesel Price : இன்றைய (01-03-2024) பெட்ரோல் மட்டும் டீசல் விலை நிலவரம் ..!

அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 321 புள்ளிகள் அதிகரித்து 22,304 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. எனவே, நண்பகல் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Read More – சூடுபிடிக்கும் அரசியல் களம்… மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு!

இந்த புதிய உச்சம் நஷ்டத்தில் இருந்த முதலீட்டாளருக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது என்றும் அடுத்த வாரம் இன்னும் இந்திய பங்குச்சந்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்