sensex [Image source : economictimes/Getty Images]
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, கடந்த செப்டம்பர் 17ம் தேதி மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 231.90 புள்ளிகள் வரை சரிந்தது.
இந்த பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணமாக உள்ளன. இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அக்டோபர் 2ம் தேதி கண்டி ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைகள் விடுமுறையில் இருந்தன. அந்த விடுமுறைக்கு முன்னதாக சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. ஆனால், இரண்டாம் நாளான இன்று 65,813 புள்ளிகள் என சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
அதன்படி, சென்செக்ஸ் 463.19 புள்ளிகள் குறைந்து 65,365.22 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல, என்எஸ்இ நிஃப்டி 152.10 புள்ளிகள் குறைந்து 19,486.20 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,828 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,638 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
இதற்கு முன்னால் 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…
சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…
ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…
டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…
விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…