கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983 உலகக்கோப்பையை வென்ற அப்போது ‘கபில்ஸ் டெவில்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டது. 1983-க்குப் பிறகு 2003 உலகக்கோப்பையில் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், கங்குலி, சேவாக் ஆகியோரது திகைப்பூட்டும் பேட்டிங்கினாலும் (குறிப்பாக சச்சின்), ஜாகீர் கான், ஸ்ரீநாத், ஆஷிஷ் நெஹ்ராவின் அதியற்புத பந்து வீச்சினாலும் இறுதிப் போட்டி வரை வந்து கோப்பையை வெல்ல முடியாமல் போனது. இடையில் 2007 உலகக்கோப்பை படுதோல்வி ஒரு விழிப்புணர்வை தோற்றுவித்தது. மீண்டும் உலகக்கோப்பையை […]
சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணி, விளையாடவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் அனைத்து ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளும் எளிதில் விற்றுவிடும் என்று தெரிகிறது. எனினும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஆட்டங்களுக்குக் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற நகரங்களை விடவும் சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விலை அதிகமாக உள்ளதாக ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். சென்னை […]
ஐபிஎல்லில் பிடித்த அணி இங்கிலாந்து மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை டேனியல் வ்யாட் எது என தற்போது தெரிவித்துள்ளார். அவர் தற்போது இங்கிலாந்து மகளிர் அணியுடன் இந்தியாவில் இருக்கிறார். முத்தரப்பு தொடரில் விளையாட வந்த இங்கிலாந்து அணி, முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் சரணடைந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 209 ரன் சேர்த்தது. பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 57 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இந்த தொடரில் டேனியல் வ்யாட் […]
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. பதினோறாவது ஐபிஎல் தொடர் வருகிற 7 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணியை வரும் 10 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் ஐ.பி.எல்.ல்லில் களம் காண்பதால், […]
பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது. கராச்சியில் நேற்று நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. ஒருவர் கூட அரை சதமெடுக்கவில்லையென்றாலும் ஃபகார் ஜமான் 39, ஹுசைன் தலத் 41, சர்ஃபராஸ் அகமது 38, சோயிப் மாலிக் 37 […]
இன்று (ஏப்ரல் 2-ம் தேதி) 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. 11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் […]
டேவிட் வார்னர் விவகாரம் ,என்னுடைய முன்னாள் காதலரின் முகம் வரையப்பட்ட முகமூடியை மாட்டிக்கொண்டு ரசிகர்கள் என்னை கீழ்த்தரமாக கிண்டல் செய்தனர் இதனால் தான் பிரச்சினை என்று அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார். வார்னர் மனைவியின் முன்னால் காதலர் சன்னி வில்லியம்ஸ் : கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில்ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப் ஆகியோர் சிக்கினார்கள். இதில் டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு 12 மாதங்கள் […]
இன்று (ஏப்ரல் 2-ம் தேதி) 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. 11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் […]
கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், கேரளாவில் ஒருகடையில் உணவு பொருட்கள் திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட பழங்குடி இளைஞர் மதுவின் குடும்பத்துக்கு நிதி உதவி அளித்துள்ளதாக இந்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ஒரு கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடியதாக பழங்குடியின இளைஞர் மது என்பவரை 16 பேர் கொண்ட ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. மதுவின் கைகளை கட்டிவைத்து அடித்தும், அவருடன் […]
தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நிலையில், தனக்கு அழுத்தம் உள்ளது என்றும் எனினும் அதனை சிறப்பாகக் கையாள முடியும் என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். கம்பீர் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் 2012, 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றது, மேலும் 2011, 2016, 2017-ம் ஆண்டுகளில் பிளே ஆஃப் சுற்றுவரை வந்தது. இந்நிலையில் அணியின் புதிய சீருடை அறிமுக நிகழ்ச்சியில் கொல்கத்தாவில் தினேஷ் கார்த்திக் கூறியதாவதுகேகேஆர் அணிக்கு கவுதம் […]
பஞ்சாப் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விரேந்தர் சேவாக் ஏப்ரல் 7ம் தேதி தொடங்க இருக்கும் 11வது ஐ.பி.எல் போட்டியில் களமிறங்குவதாக அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11வது ஐ.பி.எல் போட்டிகள் வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்க இருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு இடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 8ம் தேதி […]
பிரதமர் நிவாரண நிதிக்கு தான் 6 ஆண்டுகளாக மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக இருந்தபோது பெற்ற 90 லட்சம் ரூபாய் ஊதியத்தை, டெண்டுல்கர் நன்கொடையாக அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டெண்டுல்கர் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக 6 ஆண்டுகள் பணியாற்றினார். அண்மையில் அவர் அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு கடந்த 6 ஆண்டுகளில் ஊதியம் மற்றும் இதர சலுகைகள் என மொத்தம் 90 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. அந்த தொகை முழுவதையும் பிரதமர் நிவாரண நிதிக்கு […]
ஜமைக்கா வந்து என்னை சந்தித்து சந்தோசத்தை உணருங்கள் என்று அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னரும் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில், பதவி விலக ஒப்புக்கொண்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக டிம் பெய்ன் பொறுப்பேற்றுள்ளார். தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, கேப்டவுனில் 3வது […]
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் பந்தை சேதப்படுத்தியதில் சிக்கி 12 மாதங்கள் தடைவிதிக்கப்பட்ட செயலுக்கு தானே காரணம் என்று அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார். கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில்ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப் ஆகியோர் சிக்கினார்கள். இதில் டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சூத்திரதாரியாக கருதப்பட்டவர் டேவிட் வார்னர். அவருக்கு அடுத்த ஒரு ஆண்டுக்கு […]
தென் ஆப்ரிக்கா அணி வீரர் இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல தோனி மட்டும் தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி,20 தொடரான ஐ.பி.எல் தொடர் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதில் முதல் தொடரில் இருந்தே பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டு […]
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் சிக்கி 12 மாதங்கள் தடை பெற்ற நிலையில் கிரிக்கெட் உபகரணங்களை அவரின் தந்தை குப்பைக் கிடங்கில் தூக்கி எறிந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இந்த குற்றத்துக்கு தண்டனையாக ஸ்மித், வார்னருக்கு 12 மாதங்கள் தடையும், கேமரூன் 9 மாதங்களையும் விதித்து ஆஸ்திரேலிய […]
டில்லியில் உள்ள பிரிட்டிஷ் துாதரகம் கோஹ்லி, மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் சென்று வந்தனர். இந்திய அணி கேப்டன் கோஹ்லி. இவருக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடந்தது. தேனிலவுக்காக பின்லாந்து சென்று வந்தனர். அடுத்து, மும்பை, டில்லியில் திருமண வரவேற்பு தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்ற கோஹ்லி, தற்போது ஐ.பி.எல்., தொடருக்கு தயாராகி வருகிறார். இதனிடையே, தனது மனைவி அனுஷ்காவுடன் டில்லியில் உள்ள பிரிட்டிஷ் துாதரகத்துக்கு சென்று வந்துள்ளார் கோஹ்லி. இதற்கான […]
திங்கள்கிழமை (ஏப்ரல் 2-ம் தேதி) 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. 11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, […]
இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை கிண்டல் செய்துள்ளனர். அவர்களுடன் இணைந்து நியூசிலாந்து வீரர் டெய்லரும் கிண்டல் செய்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிருக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதன் எதிரொலியாக கேப்டன் பதவியை ஸ்மித்தும் துணை கேப்டன் பதவியை வார்னரும் இழந்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் […]
இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஐதராபாத் அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான 11வது சீசன் வரும் 7ல் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள ஐதரபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இருந்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3வது டெஸ்டில், சக வீரரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்கு துணை போன இவருக்கு, ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ஐதராபாத் அணியில் இருந்து […]