சென்னை : சண்டிகர் மாநிலத்தில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட 5வது ஐபிஎஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள 22 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிற்கு தலைமையேற்று, சைபர் கிரைம், இணையதள மிரட்டல் குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று சண்டிகரரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட எஸ்பி வருண்குமார், நாம் தமிழர் கட்சி […]
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது தான் வடதமிழக மாவட்டங்களில் சற்று மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்குவது குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். விழுப்புரம் : புயலின் தாக்கம் குறையாத காரணத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்றும் (டிசம்பர் 5) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]
கடலூர்: பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள நீர் வடியாத நிலை உள்ளது. இதனால் மாணவர்களும் பள்ளி கல்லூரிகள் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இந்நிலையில், வெள்ள நிவாரண மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் (டிச,5) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை (டிச.5) வழக்கம்போல் இயங்கும் என […]
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து, 29 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், விழா மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ” விடியலை தருவது தான் உதயசூரியன், சூரியனை பார்த்தால் கண் கூசுபவர்களுக்கு விடியல் தெரியாது. மெட்ராஸ் என்கிற பெயரை சென்னை என மாற்றியவர் கருணாநிதி, சென்னையின் அடையாளங்களை உருவாக்கியது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய […]
சென்னை: ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளம் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. அதேபோல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஆடு, மாடுகளும் பலியாகியுள்ளன. இந்த நிலையில், வெள்ளத்தால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்தோடு, நிவாரணம் பொருட்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.10 லட்சத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் […]
விழுப்புரம் : பெஞ்சள் புயல், வெள்ளம் காரணமாக முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் வெள்ளத்தால், வீடு, உடைமைகளை இழந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணி நடப்பதாலும், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு 5-வது நாளாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். சில தினங்களுக்கு முன், கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, […]
சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், அதற்கான பட்டியலையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, புதுக்கோட்டை, […]
திருப்பூர்: பெஞ்சள் புயலால் வட தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை டிபி சத்திரம் மக்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். தனது பனையூர் அலுவலகத்துக்கு மக்களை வரவழைத்து, இந்த உதவிகளை அவர் செய்தார். சுமார் 350 குடும்பங்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியதோடு, விஜய் அவர்களுடன் கலந்துரையாடி, குறைகளையும் கேட்டறிந்தார். ஆனால், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தனது இருப்பிடம் வரவழைத்து விஜய் நிவாரண […]
சென்னை: ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளிகளிலும் வெள்ள நீர் இன்னும் வடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணாமாக, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் கடலூர், அண்ணா கிராமம், பண்ருட்டி ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா? […]
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை (டிசம்பர் 05) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைப்போல 6 முதல் 10- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் […]
கோவை : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா. கரூர் : புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள். சேலம் : மேட்டுப்பட்டி, சி.கே.ஹில்ஸ், பேலூர், சி.எம்.சமுத்திரம், டி.என்.பட்டா, மங்களபுரம், மாங், வாட்டர் ஒர்க்ஸ் பகுதிகளில் மின்தடை ஏற்படும். தஞ்சாவூர் : குறிச்சி, ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கருவக்குறிச்சி, முள்ளுக்குடி, உடுமல்பேட்டை : […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், ஆளும் அரசு பற்றிய விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் ஆளும் அரசு மக்களை கைவிட்டு வருகிறது. முறையான திட்டங்களை தீட்டவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சனம் செய்து இருந்தார். அவர் பதிவிடுகையில், ” புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமாகும். அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. […]
திருவண்ணாமலை : ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் திருக்கார்த்திகை பண்டிகையை மக்கள் சிறப்பான பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். எனவே, திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட்டு வருவதும் வழக்கம். இந்த தரிசனத்தை காண வேண்டும் என்பதற்காகவே ஏராளமான மக்கள் பல மாவட்டங்களில் இருந்தும் அங்கு வருகை தருவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதனை வெளியேற்றும் பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக விழுப்புரம், கடலூரில் 3 ஒன்றியங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீர் செய்ய ஏற்கனவே மத்திய அரசிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 ஆயிரம் கோடி ரூபாய் பேரிடர் நிதியாக கேட்டிருந்த […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மாணவர்களும் பள்ளி கல்லூரிகள் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. மழைநீர் வடியாத காரணத்தால் மாணவர்கள் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 4) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து நேற்றைய தினமே அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போல, தென்பெண்ணை […]
விழுப்புரம் : ஃபெஞ்சல் புயல் கனமழையால் வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் பொன்முடி நேரில் சந்திக்க சென்ற போது அவர் மீது மக்கள் சேற்றை வாரி இறைத்தாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் சாத்தனூர் ஏரி நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட சில கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருச்சி […]
விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக அதிகனமழை கொட்டித் தீர்த்ததால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் நாளை (டிச.04) அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சாத்தனூர் அணை நீர்வரத்து அதிகரிக்கும். இதனால், அணையிலிருந்து நீரை வெளியேற்றலாம் என 29ம் தேதியே எச்சரித்தது மத்திய நீர் ஆணையம் (Central Water Commission). ஆனால், 29, 30ஆம் தேதிகளில் வெளியேறறாமல் 1ஆம் தேதி நள்ளிரவில் தண்ணீரை திறந்துவிடபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என […]
திருவண்ணாமலை : வரலாறு காணாத மழையால் திருவண்ணாமலையில் அடுத்தடுத்த இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், பரபரப்பான சூழல் நிலவியது. குறிப்பாக, வஉசி நகரில் ராஜ்குமார் – மீனா தம்பதி வீட்டின் மீது பாறைகள் உருண்டு வந்து தாக்க, உள்ளே சிக்கிக் கொண்ட 5 குழந்தைகள் உள்பட 7 பேரும் மண்ணில் புதைந்தனர். நேற்று 5 பேரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 2 பேரின் சடலங்கள் 2 நாள்கள் கடும் போராட்டத்திற்கு பின், இன்று மீட்கப்பட்டுள்ளன. மண்ணுக்குள் சிக்கி […]