திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது என அம்மாநகராட்சி ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில், அங்கு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 44 வார்டுகளில் வெற்றி பெற்று, நெல்லை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. இதையடுத்து, திமுக சார்பில் மேயராக பி.எம். சரவணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவியது. […]
தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல், மிக கனமழை பெய்து வருகிறது. மேலும், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், கனமழை அறிவிப்பை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள […]
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனால் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. உலக தடகள ஆடைகள் மற்றும் […]
உலகம் முழுக்க இன்று மக்கள் 2024 புத்தாண்டை மகிழ்ச்சியாய் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை, புதுச்சேரி, வேளாங்கன்னி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகமலாக இருந்தது. அதே போல சுற்றுலா தலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளை தொடர்ந்து திங்கள் (இன்று) புத்தாண்டு விடுமுறை என்பதால் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு என பல்வேறு சுற்றுலா தளங்களிலும் […]