வருங்கால முதல்வரே...கூச்சலிட்ட ரசிகர்! சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்சன்!

ரசிகர் ஒருவர் “வருங்கால முதல்வரே” என உற்சாகமாகக் குரல் எழுப்பியுள்ளார். இதைக் கேட்ட சிவகார்த்திகேயன் வெட்கத்துடன் புன்னகைத்து, ‘உஷ்’ என அமைதியாக இருக்குமாறு சைகை செய்துள்ளார்.

Hero Image

சென்னை : அக்ஷயா தங்க மாளிகை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயனிடம், அங்கு நிகழ்ந்த சுவாரஸ்யமான தருணம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் குறித்துப் பரவலாகப் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

திரையுலகில் உச்சகட்ட வெற்றிகளைக் குவித்து வந்த பல முன்னணி நடிகர்கள் அரசியலில் கால்பதித்து முதல்வரான வரலாற்றைத் தாண்டி, தற்போது ஜோசப் விஜய் அரசியலில் களமிறங்கி முதலமைச்சர் ஆகியுள்ள நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியல் பிரவேசம் செய்து முதல்வரானதுமே, அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இதற்காகக் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் கூறி வந்ததைச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, விஜய்யைத் தொடர்ந்து அடுத்த முதல்வர் தனுஷ் என்றும், எங்களின் வருங்கால முதல்வர் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் தான் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அக்ஷயா தங்க மாளிகை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயனிடம், அங்குள்ள சூழலும் ரசிகர்களின் ஆரவாரமும் இதையொட்டியே அமைந்திருந்தது. நிகழ்ச்சியின்போது ரசிகர் ஒருவர் "வருங்கால முதல்வரே".. என கூச்சலிட சிவகார்த்திகேயன் வெட்கப்பட்டுக்கொண்டே புன்னகையுடன் 'உஷ்' என்று அமைதியாக இருக்குமாறு சைகை செய்தார்.

இதற்கான வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் சிவகார்த்திகேயன் ரியாக்சன் பார்த்தால் அவருக்கு முதல்வர் ஆகும் ஆசை இருக்கத்தான் செய்கிறது போலிருக்கிறது" என்று உற்சாகம் அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்த நிகழ்வு தற்போது பெரும் விவாதப் பொருளாகவும், ரசித்துப் பேசப்படும் விஷயமாகவும் மாறியுள்ளது.

வருங்கால முதல்வரே...கூச்சலிட்ட ரசிகர்! சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்சன்!