கேம் சேஞ்சர் படத்தை உதறிய தளபதி விஜய்! காரணம் என்ன தெரியுமா?
கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தினை ராம்சரணை வைத்து தெலுங்கில் இயக்கியுள்ளார். பேட்ட, ஜிகிர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை அவர் ஷங்கரிடம் கொடுத்து இதனை உங்ளுடைய ஸ்டைலில் படமாக எடுங்கள் என கூறியவுடன் ஷங்கர் தன்னுடைய ஸ்டைலில் படத்தினை எடுத்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தாலும், படம் ஷங்கர் படம் என்பதால் தமிழுலும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள நிலையில், படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதலில் இந்த திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் தமிழில் விஜயை வைத்து தான் இயக்கவிருந்தாராம். அவரிடம் படத்தின் கதையை விஜயிடம் அவர் கூற கதை அவருக்கு பிடித்துவிட்டது. படம் பெரிய படம் என்பதால் எடுப்பதற்கு 1 வருடங்களுக்கு மேல் ஆகும் எனவும் ஷங்கர் அவருடம் கூறியுள்ளார்.
மொத்தமாக 1.5 வருஷம் கால்ஷீட் கொடுத்தால் இந்த படத்தை எடுத்துவிடுவேன் என ஷங்கர் கூற இதனால் மறுத்த விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக கூறப்படுகிறது விஜய் நடிக்க மறுத்த நிலையில், அவருக்கு அடுத்ததாக ஷங்கர் ராம்சரணிடம் படத்தின் கதையை கூறினார். படமும் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாகவுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் நண்பன் படத்தில் நடித்துள்ளார். அதற்கு முன்னதாக முதல்வன் படம் எடுத்த சமயத்தில் படத்தின் கதையை விஜயிடம் கூறியுள்ளார். ஆனால், விஜய் சில காரணங்கள் அந்த படத்திலும் நடிக்க மறுத்துள்ளார். அந்த படத்தை தொடர்ந்து இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்த கேம் சேஞ்சர் படத்திலும் விஜய்யால் நடிக்கமுடியாமல் போனது ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தியாக தான் அமைந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025