,
Thangalaan

அடேங்கப்பா! ‘தங்கலான்’ ஓடிடி விலை இத்தனை கோடியா? இப்பவே கண்ண கட்டுதே!!

By

கோலிவுட் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் கண்டிப்பாக விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான்  திரைப்படம் இருக்கும் என்றே கூறலாம் . பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அந்த அளவிற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதற்கு காரணம் படத்தின் கதை மற்றொன்று தரமான படங்களை இயக்கும் பா ரஞ்சித். அவர்  இயக்கும் படங்கள் எல்லாம் பேசப்படும் வகையில் இருப்பதால் கண்டிப்பாக தங்கலான் திரைப்படமும் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்த்து கோலிவுட் சினிமாவை ஆவலுடன் காத்திருக்கிறது.

இந்த திரைப்படத்தினை பிரம்மாண்ட பட்ஜெட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் கால்டாகிரோன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை!

படத்திற்கான டீசர் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை உலகம் முழுவதும் அதிகப்படுத்தி இருந்தது. இருப்பினும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிச் சென்று கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் சிஜி வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்வதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் ஓடிடி விலை குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.  ஏற்கனவே, இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான நெட்ப்ளிக்ஸ்  நிறுவனம் கைப்பற்றியதாக பூர்வமாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால் அதனுடைய விலை பற்றிய தகவல் அந்த சமயம் 35 கோடி என்று தான்  தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் தங்கலான் திரைப்படத்தை நெட்ப்ளிக்ஸ்  நிறுவனம் 50 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாம்.

read more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க!

50 கோடி ஓடிடி உரிமைக்கு சென்றுள்ளது என்றால் கண்டிப்பாக அந்த அளவிற்கு இந்த படம் தரமாக இருக்கும் என கூறப்படுகிறது. தங்கலான் திரைப்படம் 50 கோடிக்கு ஓடிடியில் விற்கப்பட்ட தகவலை பிரபல யூட்யூப் சேனல் ஆன வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. மேலும் நேரடியாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு தான் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது,

Dinasuvadu Media @2023