அயலான் கேப்டன் மில்லர் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதாவது ஜனவரி 12-ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆகி உள்ளது.
இந்த இரண்டு திரைப்படங்களும் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதனை பற்றி பார்க்கலாம்.
அயலான்
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், யோகி பாபு, சிவகார்த்திகேயன், கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்ட் நிறுவனம் வாங்கி வைத்து இருக்கிறது.
நிர்வாண காட்சியில் நடிக்க கணவர் ஊக்குவித்தார்! சரண்யா ஓபன் டாக்!
ஆனால், அயலான் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கி இருப்பதாக மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது எந்த தேதியில் வெளியாகும் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கிடைத்த தகவல் என்னவென்றால், அயலான் திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கேப்டன் மில்லர்
இயக்குனர் அருண்மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவ ராஜ்குமார், எட்வர்ட் சோனென்ப்ளிக், சுந்தீப் கிஷன், அதிதி பாலன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.
ராக்கி பாயுடன் இணையும் ஷாருக்கான்? புது படத்தின் மிரட்டல் அப்டேட்!!
இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கி வைத்து இருந்தது. படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது.