prasanna sad [File Image]
நடிகரும், இயக்குனருமான ஜி.மாரிமுத்து இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 56. இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பிறகு அவரை அருகில் இருந்த வடபழனி சூர்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாரிமுத்துவின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், மாரிமுத்து இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ படங்களில் நடித்த நடிகர் பிரசன்னா தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது ” இயக்குனர் ஜி மாரிமுத்துவின் மறைவு அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நாங்கள் இருவரும் கண்ணும் கண்ணும் புலிவால் ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கிறோம். நாங்கள் இருவரும் சகோதரர் போன்று இருந்தோம் அவரது வாழ்க்கை எளிதானது அல்ல. அவருடைய மறைவு மிகவும் வருத்தமாக இருக்கிறது. போயிட்டுவாப்பு” என பதிவிட்டுள்ளார்.
வடபழனி சூர்யா மருத்துவமனையில் உள்ள நடிகர் மாரிமுத்துவின் உடல், சற்று நேரத்தில் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனியில் பசுமலை பகுதியில் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…
சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…
சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…