இன்று நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. இந்தப் […]
பாஜக மாணவர் அணியினரை டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் , போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான தேசிய மாணவர் சங்க தலைவர் ஃபைரோஸ் கான் மீது, சத்தீஷ்கரை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஃபைரோஸ் கான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சாலை […]
பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கில் சிபிசிஐடியின் கோரிக்கையை ஏற்று நிர்மலாதேவியின் குரல்மாதிரியைப் பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அதன்படி, நிர்மலாதேவியை இன்று காலை 10 மணி அளவில் மதுரை மத்தியச் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் சென்னைக்கு அழைத்து சென்றனர். சென்னையில் உள்ள தடயவியல் அலுவலகத்தில் நாளை நிர்மலாதேவிக்கு குரல் பரிசோதனை செய்யப்பட […]
நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிக்கு மதிப்பெண் கோரும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு வந்த நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிக்கு மதிப்பெண் கோரும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தரவரிசைப்பட்டியலை வெளியிட ஏன் தடை விதிக்கக்கூடாது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் இறுதி விசாரணைக்காக வழக்கை வரும் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
நாளை நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. இந்தப் படிப்புகளுக்கான […]
பணியிட மாறுதலில் சென்ற ஆசிரியர்களை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மாணவர்கள் கண்ணீர் மல்க அனுப்பி வைத்தனர். வெள்ளியகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில மொழி ஆசிரியர்கள் பகவான் மற்றும் சுகுணா ஆகியோர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். வேறு பள்ளிக்கு அந்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை ஏற்க முடியாமல் பள்ளி மாணவர்கள் கவலையடைந்தனர். நேற்று பள்ளியில் இருந்து புறப்பட்ட இரண்டு ஆசிரியர்களையும் மாணவ – மாணவிகள் கண்ணீருடன் அனுப்பி வைத்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
அமைச்சர் செங்கோட்டையன்,ஆசிரியர் கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வரும் நிலையில், புகார்கள் தெரிவிக்கப்பட்டால் அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா மின்விசை சக்கரம் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் கலந்தாய்வில் மனசாட்சியில்லாத சிலர் குளறுபடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
9 ஆம் வகுப்பு மாணவி திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே கடத்தப்பட்ட விவகாரத்தில், பெண் எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மண்ணச்ச நல்லூர் அடுத்த இனாம் கல்பாளையத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த ராஜசேகர் என்ற 27 வயது நபர் கடத்திச்சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிவந்த ராஜசேகர், மணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் ஆதரவாளர் என்று போலீசாரிடம் கூறியதால், […]
அமைச்சர் செங்கோட்டையன்,தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், குறை கூற முடியாத அளவில் ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுவதாக தெரிவித்தார். குற்றச்செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், கல்வியுடன் ஒழுக்கம், நற்பண்புகள் கற்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , எதிர்காலத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடைய […]
பட்டப் பகலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பள்ளிச் சிறுவர்களை ஆம்னி வேனில் வந்த மர்மக்கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி கடத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அடுத்த குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்னி வேன் ஒன்று அவர்கள் அருகே வந்து நின்றது. உள்ளே இருந்தவர்கள் மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சாக்லேட்டை மாணவர்கள் வாங்க மறுத்ததால் கத்தியைக் காட்டிய […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைக் கற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு, எவ்வித ஒளிவுமறைவின்றி, வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதாக கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழ்நாடு மருத்துவர் தேர்வுக்குழு,தனியார் மருத்துவக் கல்லூரிகளில், கூடுதல் கட்டணம் வாங்கினால், புகார் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 445 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 783 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 127 இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 355 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்பு […]
ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்க ஐந்தாவது முறையாக மறுத்து விட்டது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி, ஜாமின் கோரி 5வது முறையாக ஸ்ரீவில்லிப்புத்தூர் முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி முத்துசாரதா, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மதுரை காமராஜர் பல்கலை கழக உதவி பேராசிரியர் முருகனின் ஜாமின் மீதான […]
மதுரை காமராஜர் பல்கலைகழக துணை வேந்தர் செல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமனத்தை ரத்து செய்திருந்தது உயர்நீதிமன்றம். முன்னதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், பதவி ஏற்ற உடனேயே அவர் செய்துள்ள நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக பதிவாளர் திடீரென்று ராஜினாமா செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் […]
கலந்தாய்வு நிகழ்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் நள்ளிரவு வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை வரை கலந்தாய்வு நடைபெறவில்லை. பலமணி நேரம் காத்திருந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் குடும்பத்துடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பல மணி நேரம் அங்கு காத்திருந்த பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். புதுக்கோட்டையில் கலந்தாய்வு நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி […]
பொறியியல் வேலைக்கு தகுதியானவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதே பிரச்சனை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில், தமிழக ஆளுனர் பன்வாரிவால் புரோகித், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் இயக்குனர் பல்ராம், பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு உரிய வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். மாணவர்களை வேலைக்கு […]
நாளை முதல் 10ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாளை மறுநாள் முதல் 10ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமைச்சர் அன்பழகன்,தேசிய அளவில் தொழில்நுட்ப பல்கலைகழகங்களில் முன்னோடியாக அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது என்று கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 38வது பட்டமளிப்பு விழாவில் இதனை தெரிவித்தார். ஒரு கல்வி நிலையம் எப்படி இருந்தது என்பதை விட, எப்படி செயல்பட்டது என்பதே முக்கியம் என்றார். மேலும் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் உயர்வான நிலையில் உள்ளது என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழ்நாடு மருத்துவக் குழு,எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு, கடந்த 8 நாட்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில், கூடுதல் கட்டணம் வாங்கினால், புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 445 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 783 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் […]