தமிழகத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலித்து விட்டு புத்தகங்களை வழங்காததால், மாணவர் மற்றும் பெற்றோர் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. தனியார் பள்ளிகள் புத்தகங்களுக்கான பணத்தை செலுத்தி அவற்றை வாங்கிக் கொள்வது வழக்கம். www.textbookonline.tn.nic.in இணையதளம் மூலமாகவும் மொத்தமாக ஆர்டர் செய்து புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை […]
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குப்பத்துப்பட்டியில் பாம்பின் விஷம்பட்டதில் 5 மாணவிகளுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அருகே உள்ள குப்பத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரத்தின்கீழ் பாடம் படித்தபோது பாம்பின் விஷம்பட்டதில் பாதிப்படைந்துள்ளனர்.3 பாம்புகள் சண்டையிட்டபோது விஷம் பட்டதில் மரத்தின்கீழ் இருந்த 5 மாணவிகளுக்கு பாதிப்படைந்துள்ளது.பாதிக்கப்பட்ட 5 மாணவிகளும் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிதிக்கபட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (CTET) வரும் 22ஆம் தேதி தொடங்க இருந்த விண்ணப்பபதிவு ஒத்திவைக்கபட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில்,மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (CTET) வரும் 22ஆம் தேதி தொடங்க இருந்த விண்ணப்பபதிவு ஒத்திவைக்கபட்டுள்ளது.நிர்வாக காரணங்களுக்காக விண்ணப்பப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.தேர்வுக்கான விண்ணப்ப பதிவு குறித்து மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அறிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை மாநிலக் கல்லூரியின் 2ஆம் ஆண்டு, 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை என்று கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதால் விடுமுறை என கல்லூரி முதல்வர் அறித்துள்ளார். மேலும் எம்.ஏ, எம்.எஸ்.சி வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என கல்லூரி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இன்று முதல் +1 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் 2 மணி முதல் http://www.scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தகவல் அளித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இன்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா கிண்டியில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் நடைபெறுகிறது. 2017-18இல் பயின்ற மாணவர்களுக்கு பல்கலைகழக, வேந்தரும் ஆளுநருமான பன்வாரிலால் பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார். 1304பி.எச்.டி. மாணவர்களுக்கும் பி.இ./பி.டெக்./பி.ஆர்க்கில் முதல் ரேங்க் எடுத்த 64பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாளை முதல் +1 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் http://www.scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தகவல் அளித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ,சிபிஎஸ்இ ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17மொழிகளை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், சிபிஎஸ்இ ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17மொழிகள் நீக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார். 19இந்திய மொழிகள், ஆங்கிலம் என 20 மொழிகளில் இருந்து ஏதேனும் இரு மொழிகளைத் தேர்ந்தெடுக்கலாம் என முன்பு இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய 3 மொழிகளில் ஏதேனும் இரு மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தமிழக மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளதையும் […]
நடிகர் சிவக்குமார் கல்வி, ஒழுக்கம் ஆகிய இரண்டும் சரியாக இருந்தால் மாணவர்கள் உலகின் எந்த மூலைக்கும் போகலாம் என்று கூறினார். நடிகர் சிவக்குமார் தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் மற்றும் கலை, விளையாட்டு, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டி வருகிறார். இந்நிலையில், சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 39-ம் ஆண்டு நிகழ்வு சென்னையில் நடந்தது. இதில், 21 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2,05,000 […]
இன்று கோடை விடுமுறைக்குப் பின் சென்னையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை கூறியுள்ளனர். அதன்படி பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள போலீசார், கலாட்டா மற்றும் அடிதடிகளில் ஈடுபட்டால் வழக்குகளில் சிக்கி […]
இன்றுடன் தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் முடிவடைகிறது. 2018- 2019ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு, கடந்த 10ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மேலும் www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற தளத்திலும் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பங்களை வழங்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் கூறியிருந்தது. இந்நிலையில் விண்ணப்பங்கள் […]
தமிழக அரசு சார்பில் மொழிப்பாடங்களில் உள்ள 2 தாள்களை ஒருங்கிணைத்து வெளியிடப்பட்டுள்ள அரசாணைக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை மாணவர்களின் சுமையை அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடங்களில் உள்ள 2 தாள்களை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வெழுத தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அரசாணை வெளியிட்டது தமிழக அரசின் மொழிப்பாட இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தி.நகரில் கல்வியாளர்களின் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கர்பாளையத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், , ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகளுக்கு ஜெர்மன், இங்கிலாந்து நாடுகளிலிருந்து பேராசிரியர்கள் வர உள்ளதாக கூறினார். தமிழக அரசின் ப்ளஸ் 1 பாடப்புத்தகத்தில் நீட் தேர்வுக்கான 40 சதவிகித கேள்விகள் இடம்பெற்றிருப்பதால், அதை வாங்க […]
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் சிறுபான்மை மொழி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கசவகட்டா கிராமத்தில், தனியார் பள்ளியின் திறப்புவிழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்காக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 3ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை வழங்கப்பட்டன. 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த நிலையில் கடந்த 5ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. கடந்த 8ஆம் தேதி தொடங்கிய சான்றிதழ் சரிபார்ப்புப் பணி அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழகம் முழுவதும் 42 இடங்களில் […]
இங்கிலாந்து அரசு மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது. இதனால் இங்கிலாந்து சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் கடுமையான விதிமுறைகளை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது. பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்காக ஆண்டுதோறும் விண்ணப்பிக்கிறார்கள். இவர்கள் விசா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் விதிமுறைகள் இதுவரை சற்று எளிமையாக இருந்தது. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி முதல் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்பும் வெளிநாட்டு […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நூலகங்களில் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிளஸ் டூ முடித்த மாணவர்கள் விரைவில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு, சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட இருப்பதாக கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வரும் 20ம் தேதி வரை தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைகழக மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. http://www.tnifu.ac.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசிநாளாக இருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப தேதி நீட்டிப்பு என பல்கலை. துணைவேந்தர் ஃபெலிக்ஸ் அறிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாமக்கல்லில் இன்று ரம்ஜானை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் தனியார் பள்ளிகள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. அரசு உத்தரவை மீறி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தனியார் பள்ளிகள் செயல்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பள்ளி செயல்படுவது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். முன்னதாக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.