அரசு தொடக்கப்பள்ளி தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தடங்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தோக்கம்பட்டியில் இயங்கி வருகிறது. இந்த பள்ளி 1952-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுற்று வட்டார பகுதியான இந்திரா நகர், கற்கஞ்சிபுரம், அதியமான நகர், பெருமாள் கோவில் மேடு, தோக்கம்பட்டி ஆகிய 5 பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் இதுவரை 1264 பேர் பள்ளியில் படித்துள்ளனர். இந்த பள்ளியில் படித்த நிறைய மாணவர்கள் அரசு வேலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பல அரசு அதிகாரிகளை உருவாக்கிய இந்த சிறப்பு வாய்ந்த பள்ளி […]
தமிழகத்தில் பொறியியல் படிப்பு முடித்து 1.60 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் படிப்புக்கு பயிற்சி அளிக்கப்படும் .12ஆம் வகுப்பு முடித்தாலே வேலை பெறும் வகையில் அரசு பயிற்சி வழங்கி வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.பள்ளி மாணவர்கள் புத்தகங்களை படிக்க நடமாடும் நூலகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும். மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 15 பாடங்கள் கொண்டுவரப்பட உள்ளன. மாணவர்களுக்கு […]
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளது. இதேபோல் தமிழகம் எங்கும் நேற்று பிறை தெரியாததால், நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். முன்னதாக ரம்ஜானையொட்டி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது பள்ளி கல்வித்துறை […]
அரசு தேர்வுகள் இயக்ககம், பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில், தோல்வியடைந்த மாணவர்கள் அல்லது, வருகை புரியாத மாணவர்கள், வருகிற 18 மற்றும் 19ஆம் தேதிகளில், சிறப்புத் துணைத் தேர்விற்கு, தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், இந்தாண்டு முதன்முறையாக நடைபெற்ற பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி, அதில் தோல்வியடைந்த மாணவர்களும், எதிர்பாராத காரணங்களால், தேர்வை தவறவிட்ட மாணவர்களும், சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது. இதன்படி, வருகிற 18 […]
ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் புதுச்சேரியில் நாளை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இதேபோல் தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து என்று தமிழக அரசு அறிவித்தது.தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்தது. இதேபோல் தமிழகம் எங்கும் இன்று பிறை தெரியாததால், நாளை மறுநாள் […]
சென்னை : 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் உள்ள மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் உள்ளது. இங்கு 550 மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடக்கப்பள்ளியாக இருந்து, உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் போதிய வகுப்பு அறைகளும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் தொடக்கப்பள்ளி கட்டிடத்திலேயே உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2015–ம் ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் […]
ரம்ஜானையொட்டி நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.மேலும் நாளை மறுநாள் அந்தந்த பள்ளிகளின் அறிவுறுத்தலின் படி பள்ளிகள் நடைபெறும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், பதவி ஏற்ற உடனேயே அவர் செய்துள்ள நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக பதிவாளர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் 10 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தனர். அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்த பல்கலைக்கழகங்களுக்கு […]
சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான இன்றுடன் முடிவடைகின்றன. பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 3-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை வழங்கப்பட்டன. 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. கடந்த 8-ஆம் தேதி தொடங்கிய சான்றிதழ் சரிபார்ப்புப் பணி அண்ணா பல்கலைக்கழம் உட்பட தமிழகம் முழுவதும் 42 இடங்களில் நடைபெற்று வந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு […]
தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பாடபுத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பாட புத்தகங்களை விலைக்கு வாங்குகின்றன. பின்னர் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றன. 2017-18 கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சீரமைக்கப்பட்டு பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 […]
2018-19 ம் ஆண்டுக்கான 12-ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 1ல் தொடங்கி மார்ச் 19ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 11 ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 6-ல் நடைபெறும் .+1, +2 மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் ஒரே தேர்வாக மாற்றப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஆண்டு வெளியிடப்படும் .10 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14-ல் தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறும் […]
2018-19 ம் ஆண்டுக்கான 12-ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 1ல் தொடங்கி மார்ச் 19ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 11 ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 6-ல் நடைபெறும் .+1, +2 மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் ஒரே தேர்வாக மாற்றப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஆண்டு வெளியிடப்படும் .10 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14-ல் தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறும் […]
பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் ,அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி, தனியார் பள்ளி மோகத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதைத் தடுக்க, அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுவதாகவும், அரசு பள்ளியில் […]
அரசுப் பள்ளியில் நிலவும் இடநெருக்கடி காரணமாக திருப்பூர் அருகே அருகிலுள்ள வீடுகளுக்கு ஆசிரியர்களே வாடகை கொடுத்து வகுப்புகளை நடத்தி வருகின்றனர். பெரியபாளையத்தில் இயங்கி வரும் பாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பயின்று வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இங்கிருந்த சேதமடைந்த 2 வகுப்பறைக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. புதிய கட்டிடம் கட்டும் பணிகளும் தொடங்கப்படாத நிலையில், கடுமையான இடநெருக்கடி காரணமாக ஆசியர்களே ஒன்றிணைந்து அருகிலிருந்த வீடுகளை வாடகைக்கு எடுத்து வகுப்புகள் நடத்தி வருகின்றனர். […]
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள திட்டமலையில் ரூ.10 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் கலந்து கொண்டு கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டி பூமிபூஜையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய- மாநில அரசுகள் துணையுடன் நம்பியூர் அருகே உள்ள கொளப்பலூரில் டெக்ஸ்டைல் பார்க் என சொல்லக் கூடிய […]
10ம் வகுப்பு மாணவரை, வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்த ,மர்மநபர்கள் அடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராஜீவ்காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் நரசிம்மன் என்பவரின் மகன் கார்த்தி, அதேபகுதியில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று விளையாடச் சென்ற கார்த்தி, இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இன்று காலை வீட்டிற்கு அருகிலுள்ள ஏரியில், ரத்தகாயங்களுடன் கார்த்தியின் சடலம் இருப்பதை […]