புது மாப்ள – பொண்ணு இந்த விஷயங்களை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க.!

Default Image

திருமண வாழ்க்கை என்பது எப்போதும் நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக அமையும். என்னதான் நமமை விட வயது அதிகம் கொண்ட நபர்கள் நமக்கு அறிவுரை சொன்னாலும் திருமண வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொண்டு அதனை வழிநடத்த நமக்கு சில காலம் எடுக்கும்.

இந்நிலையில், அந்த புரிதல் நமக்கு வரும் வரை திருமண உறவை பாதுகாத்து வைப்பது தம்பதிகளின் முக்கிய கடமையாகும். திருமணமான ஆரம்ப காலத்தில் தம்பதிகள் பொதுவாக சில தவறுகள் செய்வது வழக்கம். ஆனால், இதனை சிரித்த்து காலம் போனதும் அதனை தவறென்று புரிந்து கொள்வார்கள்.

அந்த வகையில், இந்த தவறுகளை நாம் ஆரம்பத்திலேயே சரிசெய்வது இல்லற வாழ்க்கையை பாதுகாப்பதோடு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்ங்க. மேலும், புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் பொதுவாக செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை ஒரு பார்வை பார்க்கலாம்.

உங்கள் தனிப்பட்ட எல்லைகளுக்கும் திருமண எல்லைக்கும் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக அது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒப்பிடலாம். நீங்கள் திருமணம் ஆன பிறகு ‘நான் மற்றும் என்னுடையது’ என்று சொல்லாமல் அதற்கு பதிலாக ‘நமக்கும் நாமும்’ என்று புரிந்து கொள்ளுங்கள்.

திருமணம் ஆன பின் குடும்பத்துடன் அல்லது நீங்கள் இருவர் மட்டுமே விடுமுறை நாட்களைக் கழிக்க நீங்கள் இருவருமே தேர்வு செய்ய வேண்டும் அந்த முடிவுகளை நீங்கள் இருவரும் அமைக்க வேண்டும்.

திருமணத்திற்குப் பிறகு உங்கள் துணை எந்தத் தவறும் செய்யக்கூடாது என்று நினைப்பது தவறானது. நீங்கள் மனிதர்கள் என்பதால் காலப்போக்கில் நீங்கள் இருவரும் வளர்ந்து, மாறுவீர்கள். தவறுகளுக்கு இடம் கொடுத்து ஒன்றாகஅதனை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அதும் மட்டும் இல்லங்க… திருமணத்திற்கு பின் உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் மொத்தமாக மறந்துவிட கூடாதுங்க. உங்கள் மனைவியையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும், அவருடன் நேரத்தை செலவிடவது மிகவும் அவசியம். இந்த மாதிரி சின்ன சின்ன விசயங்களை கற்றும் தெரிந்தும் கொள்ளுங்கள் மக்களே. இருப்பது ஓர் வழக்கை, அதனை உங்கள் துணையுடன் நல்லுறவாக இருந்து வாழுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்