WTA எனப்படும் பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் போட்டி நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு. சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை WTA உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், உலக மகளிர் டென்னிஸ் போட்டித்தொடரை நடத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் […]
அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து செல்லு 10 விமானங்கள் இன்று ரத்து. வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கில் 330 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் […]
சென்னையில் வீடுகளை இடிப்பதற்கு இடித்ததற்கு எதிராக தீக்குளித்த இறந்தவர குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு. சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்குவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு என கூறி வீடுகள் இடிபடுவதை எதிர்த்து கண்ணையன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண தொகையை முதல்வர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் […]
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.அதன்படி,நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.42-க்கு விற்கப்படுகிறது.மேலும்,பெங்களூரு தக்காளி கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதே சமயம்,முட்டைகோஸ் ஆனது கிலோ ரூ.20-ரூ.25க்கும்,ஒரு கிலோ காலிபிளவர் ரூ.18-ரூ.20க்கும் ,உருளைக்கிழங்கு கிலோ ரூ.20 முதல் ரூ.26 வரை என கணிசமாக உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் காய்கறிகளின் வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பால் […]
சென்னை எழும்பூர் வேனல்ஸ் சாலை அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணியின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பான அரசாணையில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் கி.வீரமணி அவர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் பாதுகாத்து, அவரது இயக்கமாம் திராவிடர் இயக்கத்தை, மேலும் ஐந்தாண்டு காலம் காத்தவரும், ஏராளமான ஆதரவற்ற […]
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கடும் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது என்றும் நாட்டை சீர்குலைப்பதே அந்த அமைப்பின் நோக்கம் எனவும் […]
சென்னையில் படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவிப்பு. சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வாலிபால் வீராங்கனையான 12-ம் வகுப்பு மாணவி சிந்து கடந்த ஆண்டு வீட்டின் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரு கால் எலும்புகளும் முறிந்தன. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், […]
கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது.குறிப்பாக,பல இடங்களில் வெயில் சதத்தை தாண்டியும் சுட்டெரிக்கிறது.இதனால்,பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். இந்நிலையில்,அதிக வெயில் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை வழக்கறிஞர்கள் சங்க கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார். எனினும்,வழக்கறிஞர்கள் கட்டாயம் கருப்பு கோட் மற்றும் […]
கிரிப்டோ கரன்சி மோசடியில் இரு காவலர்கள் சிக்கி ஏமாற்றம் அடைந்துள்ளதாக சென்னை காவல ஆணையர் தகவல். கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி காவலர்கள் இருவரே ஏமாற்றப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிரிப்டோ கரன்சி மோசடியில் 2 காவலர்களும், அவர்களை சார்ந்தவர்களும் சுமார் ரூ.1.44 கோடி அளவுக்கு பணத்தை இழந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியால் ஈர்க்கப்பட்டு பல தவணை முறையில் பணத்தை செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் சமூக வலைதளங்கள் […]
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,864க்கு விற்பனை. அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு குறைந்து வந்த தங்கம் விலை, மீண்டும் உயரத்தொடங்கியது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்து, ரூ.38,912க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று சென்னையில் வெள்ளியின் விலை ரூ.1 […]
உயிரிழந்த விக்னேஷின் தலை, கண் புருவம், தாடை உள்ளிட்ட உடலின் 13 இடங்களில் காயம் உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல். சென்னை புரசைவாக்கம்,கெல்லீஸ் சிக்னல் அருகே கடந்த வாரம் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,ஆட்டோவில் சென்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்ததாக கூறி காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து காவல்துறை விசாரணையில் விக்னேஷ் என்பவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், […]
காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது என்று விஜயலட்சுமி என்பாரின் வழக்கில் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. காவல் நிலையம் துன்புறுத்தல்கள் குறித்து புகார்கள் வந்தால் நீதிமன்றம் கண்மூடி இருக்காது என்றும் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் வேலைக்காக செல்வோர் பணி விசா பெற்று செல்லவும், சுற்றுலா விசா பயன்படுத்த வேண்டாம் என தாம்பரம் ஆணையர் ரவி அறிவுறுத்தியுள்ளார். வீட்டு வேலைக்கு சென்று குவைத்தில் சிக்கி தவித்த மஞ்சுளா என்ற பெண்மணி 5 நாட்களில் மீட்கப்பட்டார் என்றும் பெண்ணை விரைவாக மீட்ட பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு போலீசார், உதவி ஆணையருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆணையர், விசாரிக்காமல் வெளிநாடு செல்ல வேண்டாம் என்றும் பணி விசா எடுத்து முறைப்படி செல்ல […]
மே 5ம் தேதி சென்னையில் உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை என சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு. இதுதொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் 2022ம் நிதி ஆண்டின் முதல் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் கட்டிடத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எரிவாயு, பெட்ரோலிய பொருள் விலையேற்றத்தால் உணவகங்களின் பாதிப்புகள், மூலதனப் பொருட்களின் விலையேற்றம், குறிப்பாக சமையல் எண்ணெய், பருப்பு இவற்றின் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அவற்றின் […]
சின்னக் கலைவாணர் விவேக் சாலை என்ற பெயர் பலகையை திறந்து வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர். பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ல் மாரடைப்பால் காலமானார். கோவில்பட்டியில் பிறந்த விவேக், சென்னை, தலைமை செயலகத்தில் ஊழியராக பணியாற்றியவர். பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படம் மூல தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துணை நடிகர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தது மட்டுமின்றி, மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் சினிமா துறையில் மட்டுமல்லாது, […]
வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர், ஒரே நாளில் 10 நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்திடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரிப்பதற்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் பாலாஜி உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிடி நெக்ஸ்ட் பேப்பர் ஆகியவற்றில் […]
சென்னை:இன்று 25-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,ஏப்ரல் 6 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்களால் கடைசியாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டது,மேலும் ஒரு பதினைந்து நாட்களில் விலைகள் லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்தது. இந்நிலையில்,சென்னையில் இன்று 25-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் […]
மசாஜ் நிலையங்களில் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவு. சென்னை அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் மசாஜ் நிலையம் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து, […]
சென்னை ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 196ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களாகவே படிப்பிடிப்பாக மாணவர்கள் உள்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் கூறுகையில், இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. ஆனாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். […]
சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயிற்சி மையத்தில் பயிற்சியின்போது சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்ட துப்பாக்கி குண்டு அருகில் உள்ள வீட்டில் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கான பயிற்சி மையம் உள்ளது.நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்த நிலையில்,பயிற்சி தளத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டிருந்த போது,வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு அருகில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையை நள்ளிரவு […]