நடுவானில் பயணிகளை கதறவைத்த ஏர் இந்தியா விமானம்!கழன்று ஓடிய ஜன்னல் பேனல்கள்! 3 பயணிகள் காயம்!
ஏர் இந்தியா விமானம் ஒன்றில், நடுவானில் உள்பக்க ஜன்னல் பேனல்கள் கழன்று விழுந்ததில் 3 பயணிகள் காயமடைந்துள்ளனர். பஞ்சாப்பின் அமிர்தசரசிலிருந்து கடந்த வியாழக்கிழமை டெல்லி புறப்பட்ட அந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென 3 ஜன்னல்களின் உள்பக்க பேனல்கள் கழன்று, இருக்கையிலிருந்த பயணிகள் மீது விழுந்தது. இதில் 3 பேர் காயமுற்றனர். நடப்பதை அறியாமல் பயணிகள் குழப்பமும், பீதியும் அடைந்தனர். பெயர்ந்து விழுந்த ஜன்னல் பேனல்களை மீண்டும் பொருத்திய பணிப்பெண்கள், காயமுற்றவர்களை சமாதானப்படுத்தினர்.
டெல்லியில் விமானம் தரையிறங்கிய பிறகு, காயமுற்ற மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உள்பக்க ஜன்னல் பெயர்ந்து விழுந்தது குறித்து ஏர் இந்தியா, நிர்வாகமும் விமான போக்குவரத்துத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.