குறைந்து வரும் பெட்ரோல்,டீசலின் விலை!

By

கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக சற்று குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது.

இந்நிலையில் பெட்ரோல்,டீசலின் விலை அதன் உச்சத்தை எட்டிய நிலையில் அதிக விலைக்கு விற்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு 9 காசு குறைந்தது. இதனால் சென்னையில்  ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 81 ரூபாய் 19 காசாகவும், டீசல் விலை 72 ரூபாய் 97 காசாகவும் இருந்தது.
மேலும் கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தலா 9 பைசா குறைந்துள்ளது.

Dinasuvadu Media @2023