இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்துத் தர ChatGPT போன்ற AI செயலிகளை பயன்படுத்தக் கூடாது. நீதிமன்றம் அங்கீகாரம் பெற்ற AI செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட AI கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இந்த உத்தரவு, நீதித்துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு முக்கிய படியாக அமைகிறது.
இந்த உத்தரவு, நீதிமன்ற ஆவணங்களின் துல்லியத்தையும் ரகசியத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில் வந்தது. ChatGPT போன்ற பொது AI செயலிகள், தரவு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் தவறான தகவல்களை உருவாக்கும் வாய்ப்பு காரணமாக, நீதிமன்றப் பணிகளுக்கு பொருத்தமற்றவை என்று நீதிமன்றம் கருதுகிறது. இதுபோன்ற செயலிகள், ஆவணங்களில் பிழைகளை ஏற்படுத்தலாம் அல்லது ரகசியத் தகவல்களை கசியவிடலாம் என்ற அச்சம் உள்ளது.
எனவே, நீதிமன்றம், அங்கீகரிக்கப்படாத AI செயலிகளைப் பயன்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது. அதற்கு பதிலாக, நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட AI கருவிகளைப் பயன்படுத்துவதற்கு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி, ஆவணங்களை தயாரிக்கவும் மொழிபெய bxர்க்கவும் பாதுகாப்பான மற்றும் திறமையான AI கருவிகளைப் பயன்படுத்த உதவும்.
ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கு இந்த முடிவு ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமைகிறது. இதன் மூலம், நீதித்துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பாதுகாப்பாகவும், துல்லியமாகவும் இருக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.நீதிமன்ற அலுவலர்கள் இந்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.