கொரோனா வைரசின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாது. இது அதிக அளவிலான வைரஸை பரப்பும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி, தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசின் மூன்றாவது அலை பரவக் கூடும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் அவர்கள் கூறுகையில், கொரோனா வைரசின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாது. இது அதிக அளவிலான வைரஸை பரப்பும் என்றும், மூன்றாவது அலை எப்போது வரும் என்று தெரியாது, ஆனால் புதிய வைரஸ் பரவலை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தற்போதைய மாறுபாடுகளுக்கு இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா மட்டுமல்லாது உலகின் அனைத்து நாடுகளிலும் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகும் என்றும், அதன் பரவும் தன்மை இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். இந்திய மற்றும் உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அதற்கு ஏற்றவாறு செயலாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…