“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!
வருங்காலத்தில் AI நன்கு பயன்படுத்துவோரே, பயன்படுத்த தெரியாதவர்களை விட வேலைவாய்ப்பு பெற அதிக தகுதி உடையவர்களாக இருப்பார்கள் என AI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அரவிந்த் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு என்பது அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. AI பயன்படுத்தி பலரும் வேலை செய்து அதன் மூலம் வருமானமும் ஈட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியான சூழலில், Perplexity AI CEO அரவிந்த் ஸ்ரீநிவாஸின் இன்ஸ்டாகிராமை விடுங்கள், AI கற்றுக்கொள்ளுங்கள் என முக்கியமான அட்வைஸ் ஒன்றை கொடுத்து அது பற்றி பேசியிருக்கிறார்.
ஜூலை 21 அன்று, “The Verge’s Decoder” என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய Perplexity AI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அரவிந்த் ஸ்ரீநிவாஸ், இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை கற்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்தார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவதை குறைத்து, அதற்கு பதிலாக AI திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது குறித்து பேசிய அவர் “இன்ஸ்டாகிராமில் ஸ்க்ரோல் செய்யும் நேரத்தை குறையுங்கள். அதில் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக AI-ல் அதிக நேரம் செலவிடுங்கள். வருங்காலத்தில் AI-ஐ நன்கு பயன்படுத்துவோரே, பயன்படுத்தத் தெரியாதவர்களை விட வேலைவாய்ப்பு பெற அதிக தகுதி உடையவர்களாக இருப்பர்,” என்று அவர் கூறினார்.
“AI இப்போது சிறிய வேலைகளை மட்டும் செய்யவில்லை; முழு வேலைகளையே தானாக செய்கிறது. எடுத்துக்காட்டாக, எங்கள் Perplexity AI-இன் Comet என்ற கருவி, ஒரு வாரம் எடுக்கும் ஆட்சேர்ப்பு வேலையை ஒரே கட்டளையில் முடித்துவிடும். இது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர்களின் LinkedIn சுயவிவரங்களை சேகரித்து, தனிப்பயனாக்கப்பட்ட மின்னஞ்சல்களை அனுப்ப முடியும்.
இதனால், ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாக உதவியாளர் (executive assistant) போன்ற வேலைவாய்ப்புகள் அடுத்த ஆறு மாதங்களில் மறைந்துவிட வாய்ப்புள்ளதாக எச்சரித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் “AI கருவிகளைப் பயன்படுத்துவது உங்கள் உற்பத்தித்திறனை (productivity) பல மடங்கு உயர்த்தும். இது உங்களை மற்றவர்களை விட முன்னிலைப்படுத்தும். எடுத்துக்காட்டாக, AI மூலம் தரவு பகுப்பாய்வு, ஆராய்ச்சி, மற்றும் ஆட்டோமேஷன் செய்ய முடியும். இவை இன்றைய தொழில்நுட்ப உலகில் மிக முக்கியமான திறன்களாக உள்ளன” எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ” “NPTEL, Udemy, Coursera போன்ற தளங்களில் AI தொடர்பான இலவச மற்றும் கட்டண பயிற்சிகள் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி AI அடிப்படைகள், மெஷின் லேர்னிங், மற்றும் டேட்டா சயின்ஸ் ஆகியவற்றை கற்றுக்கொள்ளலாம். Perplexity AI போன்ற கருவிகளை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்யவும், தொழில்நுட்பத்தை புரிந்துகொள்ளவும் முயற்சியுங்கள்.இது உங்கள் எதிர்காலத்தை மாற்றும் சக்தி. இதை கற்றுக்கொள்வது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும். AI-ஐ பயன்படுத்தத் தெரிந்தவர்கள் எதிர்காலத்தில் வெற்றி பெறுவார்கள். இப்போதே தொடங்குங்கள், இல்லையெனில் நீங்கள் பின்தங்கிவிடுவீர்கள் எனவும் முக்கியமான விஷயத்தை மக்களுக்கு அட்வைஸ் ஆக Perplexity AI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பேசினார்.