#Breaking : இந்தியாவின் 15வது குடியரசு தலைவராகிறார் திரௌபதி முர்மு.!

Default Image

இந்தியாவின் 15வது  குடியரசு தலைவராகிறார் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு.

இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இதில், நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாமல் வாக்களித்தனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை காலையிலேயே தொடங்கியது. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு அவர்களும் , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா அவர்களும் போட்டியிட்டனர்.

எப்படியும் ஆளுங்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளருக்கு தான் வெற்றிவாய்ப்பு என்பது போல வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த முதலே திரௌபதி முர்மு முன்னிலை வகித்து வந்தார்.

இந்நிலையில் மூன்று சுற்றுகளுக்குப் பிறகு, ஒட்டுமொத்தமாக மொத்தம் – மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் 3219 ஆக அதன் மொத்த மதிப்பு  8,38,839.

இதில் திரௌபதி முர்மு  2161 வாக்குகளாக அதன் மதிப்பில் 5,77,777  பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹா 1058 வாக்குகளாக அதன் மதிப்பில்  2,61,062 பெற்றுள்ளார்  என்று மாநிலங்களவை பொதுச் செயலாளர் பி.சி.மோடி தெரிவித்தார்.

இதன் மூலம் இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக பொறுப்பேற்க உள்ளார் திரௌபதி முர்மு.

இம்மாதம் 24ஆம் தேதி தற்போதைய குடியரசு தலைவரின் பதவிக்காலம் முடியும் நிலையில், 25ஆம் தேதி திரௌபதி முர்மு 15 வது குடியரசு தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்