டெல்லியில் பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கொடுத்த அன்பு பரிசு.!
இன்று டெல்லி சந்திப்பின் போது, கேரளாவில் புகழ்பெற்ற கதகளி உருவ பொம்மையை பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார்.
கேரளாவில் ஆளும் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கும், கேரள ஆளுநருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காண பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, ஆளுநர் விவகாரம் குறித்தும், கேரளாவில் சட்டமன்ற மசோதாக்கள் ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும் பிரதமரிடம் கூறுவதற்கு சென்றிருந்தார்.
இன்று டெல்லியில் பிரதமரை சந்திக்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன் படி, இன்று பிரதமரை சந்தித்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
அப்போது, கேரளாவில் புகழ்பெற்ற கதகளி உருவ பொம்மையை பிரதமருக்கு , கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார். அடுத்து கேரளாவில், திட்டமிடப்பட்டு செயல்படுத்த வேண்டிய நலத்திட்டங்கள் குறித்தும் , கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கூடுதல் நிதி கேட்டும் பிரதமரிடம் பினராயி விஜயன் கோரிக்கை வைத்தார்.