சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களின் மீது, அச்சடிக்கப்படும் எச்சரிக்கை படம் குறித்த ஆந்திரா நீதிமன்ற உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளது. கடந்த, 2014ல், புகையிலை பொருள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் மீது, 85 சதவீதம், எச்சரிக்கை படம் இடம் பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், சிகரெட் பாக்கெட் மற்றும் புகையிலை பொருட்களின் மீது, 85 சதவீதத்திற்கு பதில், 40 சதவீத அளவு எச்சரிக்கை படம் இடம் பெறலாம் என, […]
கோத்ராவில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமானது எப்படி? – பிரியங்கா காந்தி கேள்வி கோத்ரா தொகுதியில் மொத்தம் எண்ணப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை 1,78,911. ஆனால் மொத்தமாக பதிவான வாக்குகளோ 1,76,417. இங்கு பாஜக வேட்பாளர் 258 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். பதிவான வாக்குகளைக் காட்டிலும் அதிக வாக்குகள் எண்ணப்பட்டது எப்படி? அதுவும் வித்தியாசம் 2,494 வாக்குகளா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்… source: www.dinasuvadu.com
இன்று தேசிய விவசாயிகளின் தினமாக கொண்டாடபாகிறது. இந்நிலையில் இன்று வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் சரண் சிங்கை நினைவில் வைத்து, ‘நாட்டிற்காக மிகவும் அர்பணிப்புடன் சேவை செய்த சவுத்திரி சரண் சிங், கிராமங்களின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் உரிமைக்காகவும் விடாமுயற்சியுடன், உழைத்தவர்’ என்று புகழாரம் சூடியுள்ளார். source : www.dinasuvadu.com
உத்தரப்பிரதேசம்; கள்ளச்சாரயம் குடிப்பதால் இறப்பவர்கள், கண், உடல் உறுப்புகளை இழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான அரியானாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஆசம்கார்க் மாவட்டத்தில் 17 பேரும், லக்னோவில் 28 பேரும் இறந்தனர். மேலும், இட்டா, பருக்காபாத் போன்ற பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் […]
ராஜஸ்தானில் துபி எனும் இடத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். மேலும் 24க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் நிறைய பயணிகள் ஆற்றுடன் அடித்து செல்லப்பட்டதால், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. source : www.dinasuvadu.com
ஆந்திராவில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஜனவரி முதல் புதிய பேட்டரி பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம், விஜயவாடா பேருந்து நிலையத்திற்கு நேற்று முன்தினம் கோல்ட் ஸ்டோன் நிறுவனத்தின் பேட்டரி பஸ் கொண்டு வரப்பட்டது. இந்த பஸ் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் விஜயவாடா, கன்னவரம் விமான நிலையத்திலிருந்து அமராவதி, வெலகம்புடி வரை இயக்க முடிவு செய்யப்பட்டது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக இந்த […]
காஸ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகள் மக்களை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி, போராட்டத்துக்கு அலைப்புவிடுத்ததன் காரணமாக முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவையானது, இன்று மீண்டும் செயல்பட தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 50வது முறையாக காஷ்மீரில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. source : www.dinasuvadu.com
போரின் போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் வீடுகள் கட்டித் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. மும்பையில் உள்ள கொலா பா பகுதியில் 31 அடுக்குமாடி வீடுகள் கட்ட, ‘ஆதர்ஷ் ஹவுஸிங் சொசைட்டி’ என்ற ஒன்று அமைக்கப்பட்டது. இதில் பல ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. முதன் மந்திரி அசோக் சவான் அவருக்கு வேண்டியவர்களுக்கு முறைகேடாக குடியிருப்புகளை ஒதுக்கினார் என்றும் புகார் கூறப்பட்டது. அசோக் சவான் மீது சி.பி.ஐ. குற்ற வழக்கு […]
அமைச்சர் ராஜ்நாத்சிங்; இது தொடர்பாகப் மக்களவையில் கூறியது, தற்போதைய விதிகளின் படி ஒக்கி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என்றார். ஒக்கி புயலில் காணாமல் போனவர்கள் 433 பேர் என்றும் அதில் மீட்கப்பட்டவர்கள் போக 275 பேரைத் தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். வெள்ளிக்கிழமையோடு, 22ஆவது நாளாக கடலோர காவல் படையைச் சேர்ந்த 18 கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்… sources; www.dinasuvadu.com
குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு 99 இடங்கள் மட்டுமே கைப்பற்றினாலும், ஆட்சியை தக்கவைத்துள்ளது. தற்போது ஆட்சியமைக்க முதல்வரை தேர்ந்தெடுத்து விட்டது. தற்போதைய குஜராத் முதல்வர் விஜய் ரூபானியே மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் நிதின் பட்டேல் துணை முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 99 எம்எல்ஏகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் இந்த அறிவிப்பை அருண் ஜெட்லி வெளியிட்டார்.
இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்காவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் இத்தாலியில் அவர்கள் நெருங்கிய சொந்தபந்தங்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதன் வரவேற்ப்பு நிகழ்ச்சி இந்தியாவில், மும்பையில் தாஜ் பேலஸ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நடிகர் நடிகைகள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் கலந்து […]
மும்பை விமான நிலையத்தில் வருவாய்ப் புலனாய்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின்போது 50கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். மும்பை சாகர் விமான நிலையத்தில் அமைந்துள்ள கூரியர் அலுவலகத்தில் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். விமானத்தில் இருந்து வந்திறங்கிய அனைத்துப் பார்சல்களையும் பிரித்துப் பார்த்தபோது துபாயில் இருந்து அனுப்பப்பட்ட பார்சல் ஒவ்வொன்றும் இரண்டரைக் கிலோ எடை கொண்ட வட்டு வடிவிலான 20தங்கக் கட்டிகள் இருந்ததைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். இவற்றைக் குஜராத் மாநில முகவரிக்கு […]
நேற்று உச்சநீதிமன்றத்தில் 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. அதனை தொடர்ந்து ஆ.ராசா அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘2ஜி விவகாரத்தில் ஒதுக்கீடில் நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் சரியானவை சட்டபடியானவை. தொலைதொடர்பு கொள்கையின்படியே உரிமங்களை ஒதுக்கினோம். தொலைதொடர்பு கொள்கை விதி பற்றி சரியான புரிதல் இல்லாமல் சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியது.’ என கூறியுள்ளார்.
சல்மான் கானின் ஒருநாள் வருமானம் ₹63.7 லட்சம். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 100 பிரபலங்கள் பட்டியலில் சல்மான் கான் முதலிடம். இவர் 232.83 கோடியுடன் முதல் இடம் ..சாருக் கான் 170.50 கோடியுடன் இரண்டாவது இடம் …விராத் கோலி 100.72 கோடியுடன் மூன்றாவது இடம் …. போர்ப்ஸ் வெளியிட்டுள்ள 100 பிரபலங்கள் பட்டியலில் 8வது இடத்தில் தோனி..! source: www.dinasuvadu.com
ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்ற பிறகு இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் குஜராத், ஹிமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரகாக ராகுல் காந்தி கடந்த 11ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிபிடத்தக்கது . source: www.dinasuvadu.com
கருப்புப் பணம் குறித்த தகவல்களை பரிமாறுவதற்காக சுவிட்சர்லாந்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுசில் சந்திரா, இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதர் ஆண்டிரியாஸ் பவும் ((Andreas Baum )) ஆகிய இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. ஒப்பந்தத்தின் படி இருநாடுகளும் வரி தொடர்பான அனைத்து தகவல்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளுகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இருநாடுகளும் தகவல்களை பரிமாறிக் கொள்ள […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க அமைச்சரவையின் தொழிலாளர் நல அமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ் நேற்றைய தினம் ஒரு அரசு விழாவில் பேசும்போது இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பா.ஜ.க. வின் வெற்றிக்கு காரணம் உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல்வாதி நமது பிரதம மந்திரி நரேந்திர மோடி தான் என்று அவரைப் பாராட்டினாராம். அருகில் இருந்தவர்கள் யாரும் அவரை திருத்த முயற்சி செய்யவில்லை. ஆனால் அவர் நரேந்திர மோடியை உலகின் மிக அதிகமான ஊழல்வாதி என்று பேசிய அந்த […]
இந்திய கிரிகெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 2012ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் அவரின் வருகை குறைபாடு காரணமாக விமர்சிக்கபட்டார். ஆனால், அவர் விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான கேள்விகளை கேட்டு உள்ளார். சமூக நலனுக்காக பாராளுமன்ற உறுப்பினராக அவர் துறையில் ஒதுக்கப்பட்ட நிதியில் 98 சதவீதம் பயன்படுத்தி உள்ளார். அவர் இன்று முதன் முதலாக பாராளுமன்றத்தில், விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் என்கிற தலைப்பில் பேச ஆரம்பித்தார். ஆனால் […]
2000 நோட்டுகள் தற்போது அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் அதனை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனை குறித்து வெளியிட்ட அறிக்கையில், ரூ.2.46 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூ நோட்டுகள் பழக்கத்துக்கு வரவில்லை. அதனால், ரிசர்வ் வங்கி 2000 நோட்டு அச்சிடுவதை நிறுத்தியுள்ளது. மேலும் கையில் இருப்புள்ள 2000 நூடுகளையும் புழக்கத்தில் வெளியிட வில்லை ‘ எனவும் கூறியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்துப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ரயில்வேயின் திறனை மேம்படுத்தவும், மனிதவளத்தைத் திறன்மிக்கதாக ஆக்கவும் நாட்டிலேயே முதன்முறையாகக் குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்துப் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இந்தப் பல்கலைக்கழகத்துக்கான அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டு ஜூலை மாதம் முதல் […]