ஜி-20 நாடுகளின் தலைமை.. இந்தியாவுக்கு பெருமை.! பிரதமர் மோடி மகிழ்ச்சி.!

Default Image

அடுத்த வருடத்திற்கான ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க உள்ளது பெருமை மிகு தருணம் என ஜி20 லோகோவை வெளியிட்ட பின்னர் பிரதமர் மோடி பேசினார். 

இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு.

இந்த அமைப்பில் 1999 முதல் இந்திய உறுப்புநாடாக இருக்கிறது. இதன் மாநாடு வருடா வருடம் ஒவ்வொரு நாட்டின் தலைமையில் நடைபெறும். 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்தாண்டு ஜி20 மாநாடு இத்தாலியில் நடைபெற்றது. அடுத்த ஆண்டு ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை தங்குகிறது. வருகிற டிசம்பர் 1 முதல் 2023 நவம்பர் 30 வரையில் ஜி20 தலைமை பொறுப்பில் இந்தியா இருக்கும்.

அதற்கான ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் புதிய லோகோ, கருப்பொருள் ,  இணையதளம் ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். இது இந்திய வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி என அவர் பெருமையாக கூறினார்.

மேலும் இதன் லோகோவில் இருக்கும் தாமரை, கொரோனா காலத்தில் போராடி உலகம் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்தது போல, எந்த சூழல் எப்படி இருந்தாலும் தாமரை மலரும் ஆகவே தாமரை இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என பிரதமர் விளக்கமளித்தார்.

இந்த ஜி20 மாநாட்டிற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

allu arjun - OneElection
live tamil news
EVKS Elangovan
BJP Leader LK Advani
evks elangovan
Pushpa 2 actor Allu arjun
gold price
Australia vs India - 3rd Test