நாட்டில் அதிகம் கொரோனா பரவல் காணப்படுவதால் சிகரெட் மற்றும் பீடிக்கு தற்காலிகமாக தடை விதிக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. கொரோனாவால் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன் நாளுக்குநாள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். தலைநகர் டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிவேகமாக கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்த மனு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்துள்ளது. அப்பொழுது கடந்த ஆண்டில் புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவுக்கு பலியானதற்கான எண்ணிக்கை குறித்த ஏதேனும் தகவல் கிடைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நிலை மோசமடைந்தவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் எனும் சந்தேகமும் அதிகம் எழுந்துள்ளது.
கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிப்படையும் என ஏற்கனவே ஆய்வுகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் உடல் நலத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சிகரெட் மற்றும் பீடிக்கு கொரோனா பரவல் அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில் தற்காலிகமாக தடை விதிக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…