தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழை தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி, தேனி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை (அக் 14) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அர்ஜகராக பணியாற்ற்றும் ஜெய ஆனந்த் என்கிற கர்ணன் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கோவில் குறித்த அவதூறான கருத்துக்களை பரப்பி வந்ததால் அவர் மீது இந்து சமய அற நலத்துறை நடவடிக்கை எடுத்தது. கடந்த மாதம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரத்தில் அடிவாரத்தில் உள்ள பழமையா கருங்கற்களை எடுத்துவிட்டு டைல்ஸ் கற்களை பதிக்கிறார்கள்’ என பதிவிட்டு இருந்தார். இந்த காரணத்துக்காக இந்து சமய அற […]
காசா நகரில் ஒரே இரவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் குழுவின் மூத்த அதிகாரி உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான குண்டுகளை இஸ்ரேல் மீது வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதன்பின், ஹமாஸ் அமைப்பினர் மீது பதில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். அப்போது, தொடங்கிய அந்த போர் இந்த வார சனிக்கிழமையான இன்றுடன் 8வது நாளாக தொடர்ந்து மாறிமாறி தாக்குதல் நடைபெற்று […]
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. இந்த ஆட்சிக்கு பின் மீட்கப்பட்ட கோயில் நிலங்களின் முதல் பாக புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் மீட்கப்பட்ட நிலங்களின் விவரங்களை நாங்கள் தெரிவித்துள்ளோம். கடந்த 2 மாதங்களுக்கு முன் மீட்கப்பட்ட கோயில் நிலங்களின் இரண்டாம் பாக புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட புத்தகங்களின் மூன்றாம் பாகம் வெளியிட உள்ளோம். […]
சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை பறிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறைச் சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல, அவர்களை நல்வழிப்படுத்தும் இடங்களுமாகும். கடந்த 29 மாத திமுக ஆட்சியில், சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக செய்திகள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதாக நாளிதழ்களில் கட்டுரைகள் […]
சு.வெங்கடேசன் எம்.பி, தனது எக்ஸ் தள பக்கத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கான கால வரையறை திட்டத்தை (Bar chart) தாருங்கள் எனக் கேட்டதற்கு “அதே வாழைப்பழந்தான் இது” என்பது போன்று பதில் சொல்லியுள்ளார் ஒன்றிய அமைச்சர். விதி 377ல் கேட்கப்பட்ட கேள்விக்கு கூட நேர்மையாக பதில் தர முடியாத அளவு தோல்வி அடைந்துள்ளது ஒன்றிய அரசு என பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 8, 2023 அன்று அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை என்ற […]
அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்க கோரி விழுப்புரத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் 18ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 […]
தமிழகத்தில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது முதல் நாள் சிறப்பு காட்சிக்கு பல ரசிகர்கள் வருகிறார்கள். படம் வெளியாகும் முதல் நாள் என்ற காரணத்தினாலே அனைவரும் இணைந்து கொண்டாடுவது வழக்கம். இந்த கொண்டாட்டம் கொண்டாட்டமாக இருந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால், சில சமயம் இது வன்முறையாகவும், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மாறிவிடுகிறது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் போது முதல் […]
திமுக மகளிர் அணி சார்பில் இன்று (அக். 14) சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்திருந்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் […]
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்து, அவர் பெற்ற ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்களை மறைத்ததற்காக சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என கூறியுள்ளார். அந்த வழக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் […]
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் – பாலஸ்தீன மக்கள் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தொடர்ந்து அங்கு தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இன்னும் 114 தமிழர்கள் இஸ்ரேலில் உள்ளனர் […]
8வது நாட்காளாக இஸ்ரேல் – ஹாமாஸ் அமைப்பு தாக்குதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தீவிரமடைந்து வருகிறது. முதலில் ஹமாஸ் அமைப்பு தங்கள் தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்தது. அதன் பிறகு இஸ்ரேல் தங்கள் பதில் தாக்குதலை கடுமையாக நிகழ்த்தி வருகிறது. இந்த ஹாக்குதலில் இஸ்ரேல் – பாலஸ்தீன மக்கள் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் குழுவினர் இடையே தீவிர போர் நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டை சேர்ந்த மக்களை மீட்டு வருகிறார்கள். ஆபரேஷன் […]
சுமார் 178 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று அதிசய சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது வானில் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் போல தோன்றும் என கூறப்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் வசிப்பவர்களால் பார்க்க முடியாது. நம்முடைய இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 8:34 மணி முதல் நள்ளிரவு 2:25 மணி வரை இது நிகழவுள்ளது. இந்த கிரகணமானது அமெரிக்காவின் சில பகுதிகளில் தெரியும் என கூறப்படுகிறது. அதன்படி, அமெரிக்காவில் மெக்சிகோ […]
திமுக மகளிர் அணி சார்பில் இன்று (அக். 14) சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்திருந்தார். இதுதொடர்பாக எம்.பி. கனிமொழி வெளியிட்டிருந்த அறிக்கையில், அனைத்து துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமைக்காகவும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வாயிலாக, பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அடுத்தடுத்துச் செயல்படுத்தி வருகிறார். எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை […]
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழிப்பாதை துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, எ.வ.வேலு, நாகை எம்.பி. செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று, சொகுசு கப்பல் போக்குவரத்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை துறைமுகங்கள் துறை அமைச்சர் காணொலி மூலம் பங்கேற்றனர். அக்.12ல் தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்துக்கு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த […]
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 7 நாளாக நடைபெற்று வரும் பயங்கர போரில் காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் 447 குழந்தைகள் உயிரிழந்ததாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான குண்டுகளை இஸ்ரேல் மீது வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதன்பின், ஹமாஸ் அமைப்பினர் மீது பதில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதனைத்தொடர்ந்து, காசா பகுதியில் தொடர் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. ஹமாஸ் […]
இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலில் உள்ள குடியிருப்புகள் மீது 150 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையும் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. தெற்கு இஸ்ரேல் பகுதியில் மக்களை எச்சரிக்கும் வகையில் அபாய சங்கு ஒலிக்கப்படுகிறது என்றும் […]
பொதுமக்களின் நலன் கருதி, ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும், தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல வசதியாக சென்னை தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து வரும் […]
அதிமுகவின் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் வாரும் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேரடையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவை அதிமுக கழட்டிவிட்டது. இதன்பின் இரு தலைவர்களும் மவுனம் காத்து வந்ததால், மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருப்பத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சந்தனமரங்கள் தான் இந்த மாவட்டத்தில் பெரிய வருவாயை ஈட்டி கொடுத்தது. வீரப்பன் மீது அநியாயமாக பலி போட்டார்கள். அவர் அந்த காட்டில் இருந்தவரை ஒருவனும் காட்டிற்குள் செல்லவில்லை. அவர் இருந்திருந்தால், இன்றைய காவேரி நிலை வந்திருக்காது. அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் மீது வீணாக பழி சுமத்தினர். நாகப்பாவை கடத்தினவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா? என கலகலப்பாக பேசியுள்ளார். […]