தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றியதாக வெளியான செய்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மறுப்பு தெரிவித்தார். சென்னையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வந்த நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் நவமணி வேதமாணிக்கம் என்பவர், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு காரணமாக தனது தொழில் நிறுவனத்தை மூடி விட்டதாகவும், இதற்கு காரணம் அதிமுக தான் எனவும் குற்றசாட்டியதாக கூறப்பட்டது. இந்த சம்பவங்களின் தொடர்பாக அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய செல்லூர் ராஜு, தொழிலதிபரை ஏமாற்றிவிட்டார் என […]
காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, கர்நாடக அரசு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை அம்மாநில அரசு தராமல் இருந்து வருகிறது. இதனால் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம், மத்திய அரசு என பல்வேறு முறைகளில் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு முன்வைத்து வருகிறது. இருப்பினும், கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பு தெரிவித்து […]
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த ஹாக்குதலில் இஸ்ரேல் – பாலஸ்தீன மக்கள் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். தாயகம் திரும்பிய […]
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் பெரும்பாலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போர் பதற்றம் அதிகமாகியுள்ள காரணத்தால் இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. “ஆபரேஷன் அஜய்” எனும் பெயரில் இஸ்ரேலில் இருந்து […]
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து, செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
சென்னை லால்டாக்ஸ் சாலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அமைச்சர் உதயநிதி, சென்னை தூய்மையாக இருப்பதற்கு தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பார்க்கும் பணியே காரணம். ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கமே வாங்காத குஜராத் மாநிலத்துக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில சுயாட்சியை பறிக்கும் வேலையை பாஜக செய்கிறது. இதற்கத்தான் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்தை பாரபட்சமாக […]
இந்தியா முழுக்க இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப நீட் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேசிய பொது கவுன்சிலில் பங்கேற்பர். மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களில் குறிப்பிட்ட அளவு அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், மீதம் உள்ள குறிப்பிட்ட அளவு இடங்கள் மத்திய அரசுக்கும் வழங்கப்படும். தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவ கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என சேர்த்து […]
சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் அக். 14ம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிப்பட்ட அறிக்கையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கழக மகளிர் அணி சார்பில் வரும் 14ம் (சனிக்கிழமை) அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ […]
டெல்லியில் உள்ள யஷோபூமியில் ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில், பொது டிஜிட்டல் தளங்கள் மூலம் மக்களின் வாழ்க்கையில் மாற்றம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துதல், நிலையான எரிசக்தி மாற்றம் ஆகியவை குறித்து பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல்: மிசோரம், சத்தீஸ்கரில் […]
குஜராத் மாநிலம், வதோதராவில் இந்துத்துவா அமைப்பானா ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய RSS பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே, ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் ஜாதி பாகுபாட்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். மேலும் அவர் கூறுகையில், ‘ அனைத்து இந்து கோவிலிலும் அனைவருக்கும் நுழைய உரிமை உண்டு. அனைத்து நீர் ஆதாரத்திலிருந்தும் தண்ணீர் எடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு. சாதி பாகுபாட்டின் பெயரால் இத்தகைய பாகுபாடுகளை நாம் சகித்துக் கொள்ளக்கூடாது, […]
காசாவில் இருந்து மக்கள் வெளியேற்ற வேண்டும் என்ற உத்தரவில் ஐ.நா.வின் பதில் வெட்கக்கேடானது என இஸ்ரேல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான குண்டுகளை இஸ்ரேல் மீது வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதன்பின், ஹமாஸ் அமைப்பினர் மீது பதில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதனைத்தொடர்ந்து, காசா பகுதியில் தொடர் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கு குழி, சுரங்கபாதைகளை தகர்த்து வருகிறது. இதுபோன்று […]
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காலிப்பாளையம் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த தொட்டியில் அதிர்ச்சியூட்டும் வண்ணம் மனித எலும்புகள் கிடந்துள்ளது. இதனையடுத்து, சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் தொட்டியில் இருந்து அகற்றி, இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் மனித எலும்புகள் வைத்த இடத்தில் இருந்து காணாமல் போய்விட்டது. இதனை தொடர்ந்து, இது தொடர்பாக போலிஸாருக்கு தகவல் அளித்தனர். […]
இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், காசா நகரின் ஹமாஸ் பதுங்கு குழியில், வைக்கப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை அதிரடியாக சண்டையிட்டு மீட்கும் காட்சிகளை வெளியிட்டுள்ளது. ஹாமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்ததை தொடர்ந்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இன்று, இஸ்ரேல்-ஹமாஸ் போரின் ஏழாவது நாளைக் குறிக்கிறது. போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலில் 1,200 பேரும் […]
கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தன்னைத்தானே தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தனது வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி – பெங்களூர் சாலையில் வெங்கடேஸ்வரா ஜுவல்லரி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் நடத்தி வந்த நிலையில், திடீரென தற்கொலை செய்துகொண்டார். கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்கங்களின் நகர தலைவராகவும் இருந்தவர் தொழிலதிபர் எம்.பி சுரேஷ். கடந்த சில நாட்களாக தொழிலதிபர் எம்.பி […]
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் போர் தொடுத்ததை தொடர்ந்து, இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா பகுதியில் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தொடர் தாக்குதலில் இதுவரை 1,200 பாலஸ்தீனியர்களும், 1,300 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலால், காசா பகுதியில் வாழும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இஸ்ரேல் ராணுவம், காச பகுதியில் மிசாரத்தை துண்டித்துள்ளதோடு, அங்கு உணவு மற்றும் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. காஸாவில் உள்ள […]
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இது GROUP தேர்வு என்ற வகைகளின் கீழ் பல்வேறு அரசு துறையில் உள்ள பணியிடங்கள் நிரப்படுகிறது. இந்த நிலையில், GROUP VII-A தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் 9 முதல்நிலை நிர்வாக அதிகாரி காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள 9 […]
ஹாமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்ததை தொடர்ந்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த தொடர் தாக்குதலில் இதுவரை 1,200 பாலஸ்தீனியர்களும், 1,300 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர். காசா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் அங்கு வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் அங்கு […]
இந்தாண்டுடன் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடடிவடையும் நிலையில், மொத்தம் 679 தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சமீபத்தில் அறிவித்தார். 5 மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதியும், சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் […]
தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் கடந்த வாரம் சென்னையில் போராட்டம் நடத்தினர். பணி நியமனம், சம வேலை சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தனர். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அரசுக்கும் – ஆசிரியர்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள், தங்கள் 30 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று (அக்டோபர் […]
கடந்த 6 நாட்காளாக இஸ்ரேல் – ஹாமாஸ் அமைப்பு தாக்குதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தீவிரமடைந்து வருகிறது. முதலில் ஹமாஸ் அமைப்பு தங்கள் தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்தது. அதன் பிறகு இஸ்ரேல் தங்கள் பதில் தாக்குதலை கடுமையாக நிகழ்த்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருப்பதாக அறியப்படும் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர். வான்வெளி தாக்குதல் மட்டுமின்றி தற்போது தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன […]