510-வது நாளாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் முடிவடையும் நிலையில், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 9-ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நவ.25-ஆம் ஏத்தி இந்த தேர்தல் நடைபெறும் என தேர்தல் தேதியை இந்திய […]
கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. சி.த. செல்லப்பாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. ஆ. இளவரசன் ஆகிய இருவரையும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.சி.த.செல்லப்பாண்டியன் அவர்களும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.ஆ. இளவரசன் அவர்களும், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அனைத்திந்திய அண்ணா […]
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்களில் 28% தமிழ்நாட்டில் இருந்து பெற்றுள்ளோம். விளையாட்டுத் துறையின் அமைச்சர் ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ‘ஸ்டார்’ துறையாக வளர்ந்து வருகிறது. விளையாட்டுத்துறையில் கேப்டனாக இருந்து அமைச்சர் உதயநிதி அவர்கள், […]
ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு, போக்குவரத்துத்துறை சார்பில் தீபவளி போனஸ் வழங்குவது வழக்கம். அந்த வகையில், போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் தீபாவளி போனஸ் 20% வழங்கிட வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காண்பித்து 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைத்ததை இந்த ஆண்டு செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தற்பொழுது அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு […]
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்த விவகாரத்தில், அரசு மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையினருக்கு இடையே மோதல் போக்கானது தொடர்ந்து வந்தது. இந்த நிலையில், ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு வார்டில் அத்துமீறி நுழைந்த மாநகராட்சி நகர் நல அலுவலரை பணிநீக்கம் செய்ய கோரியும், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்க கோரியும் கடந்த 11 நாட்களாக அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் அமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தை […]
தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அவர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த மார்ச் மாதம் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த […]
ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் ஹமாஸ் இயக்கம் ஒடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆவேசமாக கூறியுள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடுமையான யுத்தம் நடந்து வருகிறது. இஸ்ரேலியன் நகரங்களில் நுழைந்தும், காசா பகுதியில் இருந்து குண்டுகளை வீசியும் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேல் படையும், ஹமாஸ் அமைப்பினர் தங்கியிருக்கும் பதுங்கு குழி, சுரங்கபாதைகளை மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்த […]
இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 230 பேருடன் முதல் விமானம் நாளை காலை வருவதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் 6-வது நாளாக இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் என இரு நாட்டை சேர்ந்த சுமார் 2 ஆயிரதிற்க்கும் மேற்பட்டோர் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, […]
திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை முடக்குவதாக நேற்று அமலாக்கத்துறை தெரிவித்தது. கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆ.ராசாவின் பினாமி எனக்கூறி சொத்துக்களை முடக்கியுள்ளதாக X தளத்தில் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது 15 அசையா சொத்துக்கள் பினாமி பெயரில் நடத்தி வந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டப்படி, திமுக எம்பி ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது. வருமானத்துக்கு […]
ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 22 பேர் உட்பட மொத்தம் 25 பேரை அம்மாநில தடுப்பு பிரிவு காவல்துறை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் அதிகம் இருப்பதால், இதனை வெட்டி பல காலங்களாக கடத்தல் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு, செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு ஒன்றை உருவாக்கி செம்மரம் கடத்தலை தடுத்து வருகின்றனர். இந்த சமயத்தில் ஆந்திராவில் செம்பரம் கட்டை கடத்துவதாக தடுப்பு […]
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் காசா பகுதி மீது பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே யுத்தம் இன்று 6 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பாலஸ்தீனம் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக […]
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராகவும், வணிகவரி முதன்மை செயலர் தீரஜ்குமார் தகவல் தொழில்நுட்பத்துறை, டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, பள்ளிக்கல்வித்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி குமரகுருபரனை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. […]
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த மாநிலங்களும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். அதில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்காக 35,356 […]
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் காசா பகுதி மீது பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் என இரு நாட்டை சேர்ந்த சுமார் 2 ஆயிரதிற்க்கும் மேற்பட்டோர் கூறப்படுகிறது. தற்போது, காசாவை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், காசா நகரில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. காசா நகரில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும் […]
தமிழகத்தில் விஜய தசமியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் பேரணி நடத்துவதற்கு இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு, பேரணி நடத்துவதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடம், RSS நிர்வாகிகள் சார்பில் அனுமதி கோரப்பட்டது. தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், பேரணி நடத்த நாள் நெருங்குவதால் இன்னும் அனுமதி கிடைக்கபெறாத காரணத்தால் RSS சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், […]
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் காசா பகுதி மீது பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் என இரு நாட்டை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. (உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை). ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும், பாலஸ்தீனிய பகுதியான காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வெளி தாக்குதல் நடத்தி […]
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நாளை கூடுகிறது. அதன்படி, நாளை பிற்பகல் 2 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே ஹெல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. நேற்று நடந்த ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு அடுத்த 16 நாட்களுக்கு விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்ககாவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நாளை டெல்லியில் […]
டெல்லியில் இருந்து ஆனந்த் விஹார் என்ற இடத்தில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயிலானது, பீகாரின் பக்ஸர் மாவட்டம், ரகுநாத்பூர் ரயில்வே நிலையம் அருகே நேற்று மாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் நான்கு பயணிகள் உயிரிழந்தனர். மேலும், ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீகாரில் ரயில் தடம்புரண்ட விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தாருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸுக்கும் இடையேயான போர் ஆறாவது நாளாகத் நீடித்து வரும் நிலையில், இந்த தாக்குதலில் அமெரிக்க வாசிகளும் உயிரிழந்துள்ளனர், இந்த போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதாக அறிவித்திருந்தது. தற்பொழுது, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் அமெரிக்க வாசிகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாயன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்திய 11 எண்ணிக்கையிலிருந்து தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. […]