இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் 6-வது நாளாக இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே இதுவரை நான்கு முறை போர் நடந்துள்ளது. இந்த சமயத்தில் இந்த யுத்தம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. தற்போது இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக ஹமாஸ் அமைப்பினர் போர் பிரகடனம் எடுத்துள்ளனர். இஸ்ரேல் மீது […]
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் தீவிரமடைந்து உள்ளது. இதுவரை இந்த தாக்குதலில் இஸ்ரேல் – பாலஸ்தீனியம் என இரு நாட்டை சேர்ந்த மக்கள் சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகிறது. காஸாவில் , […]
இன்று தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா.ஐஏஎஸ் மற்றும் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா பிறப்பித்த உத்தரவின்படி பணியிட மாற்றப்பட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பெற்றுள்ள விவரங்கள் பின்வருமாறு… தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த செந்தில்ராஜ்.ஐஏஎஸ், தற்போது சிப்காட் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட […]
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் அக்டோபர்-10 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசன நீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடிக்கு கீழ் குறைந்துள்ள நிலையில், பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளதால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் இன்று சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,528 கனஅடியிலிருந்து 9,347 […]
ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் நடத்திய ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வருகின்ற 2024-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி கோவையில் மாபெரும் மாநாடு நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துளளார். ஓபிஎஸ்-யிடம் இரட்டை இலை கிடைக்காத போது தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு முடிவு பெற்றவுடன், அதற்குரிய பதிலை உங்களிடம் சொல்லுவோம் என தெரிவித்துள்ளார். பின் சசிகலா […]
509-வது நாளாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி முத்து சரவணன் என்பவர் இன்று காலை தமிழக காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். செங்குன்றம் அருகே பாரியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கிலும், நெல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு உட்பட 7 கொலை வழக்குகளில் காவல்துறையினாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறியப்பட்டவர் ரவுடி முத்து சரவணன். பாரியநல்லூர் முன்னாள் […]
நேற்று இரவு சரியாக 9:30 மணி அளவில் டெல்லியில் இருந்து ஆனந்த் விஹார் என்ற இடத்தில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயிலானது பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டம், ரகுநாத்பூர் ரயில்வே நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 21 ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்வே தடம்புரண்ட செய்தி அறிந்ததும் உடனடியாக பயணிகள் மூலம் ரயில்வே துறைக்கு தகவல் […]
இஸ்ரேல்-ஹமாஸ் குழுவினர் இடையே 5 நாட்களாக தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதுவரை, ஹமாஸ் – இஸ்ரேல் தாக்குதலில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3000-ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், காசாவை தொடர்ந்து லெபனான் மீது வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல். இந்த போரில் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தற்போது, காசாவை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், காசா […]
நாட்டில் 15-29 வயது உட்பட்டோருக்கான “மேரா யுவா பாரத்” (My Bharat) எனும் புதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர், இளைஞர் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், தன்னாட்சி நிறுவனமான மேரா யுவ பாரதத்தை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நாட்டில் உள்ள 40 கோடி இளையோர்களை […]
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் இருக்கிறது என அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. திமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த […]
அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சட்டப்பேரவையில், ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும், நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது. 2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ5.16 லட்சம் கோடி. ஆனால், வரிப்பகிர்வாக நமக்கு கிடைத்தது ரூ2.08 லட்சம் கோடி மட்டுமே. உ.பி.,யின் பங்களிப்பு ரூ2.24 லட்சம் கோடி. ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டது ரூ9.04 லட்சம் கோடி. இப்படித்தான் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு […]
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 5-வது நாளாக போர் தீவிரமடைந்து உள்ளது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் தரப்பும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதுவரை ஹமாஸ் – இஸ்ரேல் தாக்குதலில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3000-ஐ கடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது, இஸ்ரேல் ராணுவமானது அமெரிக்கா உதவியுடன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் காசாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் […]
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 9-ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1,276 வாக்குச்சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவு […]
சென்னை ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15, 2023 முதல் அக்டோபர் 24, 2023 வரை நடைபெறும் ‘நவராத்திரி கொலு’ கொண்டாட்டங்களுக்கு ராஜ் பவன், மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை ஆளுநர் மாளிகையில், ‘நவராத்திரி கொலு – 2023’ அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24, 2023 வரை கொண்டாடப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் சென்னை ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15, 2023 (ஞாயிறு) அன்று நடைபெறும் […]
காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை, உச்சநீதிமன்ற உத்தரவுபடி திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. காவிரி ஒழுங்காற்று குழு கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் அடுத்த 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 88-வது கூட்டம், தலைவர் வினீத் குப்தா தலைமையில் […]
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். இவ்வழக்கில் இருந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த இரு மனுக்களை சமீபத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சிறைத் துறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், அவர் சென்னை […]
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை அடுத்து மணிப்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் மெய்தி சமுதாயத்திற்கு பழங்குடிய அந்தஸ்து வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில், இவர் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 9-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டமானது 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். முதல் நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இதனையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக, பாமக […]
காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை, உச்சநீதிமன்ற உத்தரவுபடி திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசு சார்பில் கர்நாடக அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி, தண்ணீர் தர மறுப்பதாக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் அடுத்த 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் […]