அரசு பேருந்தை………முந்த சென்று தனியார் பேருந்துடன்……..மோதிய தனியார் பேருந்து……விபத்து…! 40 பேர் படுகாயம்…!!!

Default Image

அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து மற்றொரு தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்று தனியார் பேருந்துடன் மற்றொரு தனியார் பேருந்துமோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கோடூர விபத்து பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற PLA என்ற பேருந்தும் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற மீரா என்ற பேருந்தும் மேல உளூர் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து நடந்துள்ளது.இந்த விபத்தில் PLA பேருந்து ஓட்டுநர் உட்பட இரு பேருந்துகளிலும் பயணித்த 40 பயணிகள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், PLA பேருந்து முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது தான் தன் எதிரே வந்த தனியார் பேருந்துடன் மோதியது தெரியவந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்