100 சதவீத சுகப்பிரசவ இலக்கை நோக்கி சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.! – அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.!

Default Image

மகப்பேறு சிகிச்சையில் அறுவை சிகிச்சை இல்லாமல் 100 சதவீதம் சுக பிரசவம் என்பதே மகப்பேறு பிரிவின் நோக்கமாகும். – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குகைதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு சிகிச்சைகள் பற்றி பல்வேறு தகவல்களை கூறினார்.

அவர் கூறுகையில், மகப்பேறு மருத்துவ சேவையில் சிறந்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. சிறந்த மருத்துவ சேவையை அரசு மருத்துவமனை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டை விட பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெகுவாக இறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

அரசு மகப்பேறு சேவையில் அறுவை சிகிச்சை சதவீதம் கடந்தாண்டு 43 சதவீதமாக இருந்தது. அது தற்போதைய ஆண்டு 38 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த 5 சதவீதம் என்பது ஏற்றுகொள்ள கூடியது இல்லை என்றாலும் நல்ல முன்னேற்றம் தான்.

மகப்பேறு சிகிச்சையில் அறுவை சிகிச்சை இல்லாமல் 100 சதவீதம் சுக பிரசவம் என்பதே மகப்பேறு பிரிவின் நோக்கமாகும். சில தாய்மார்கள் ஏதேனும் குறிப்பிட்ட தேதிகளில். யாருடைய பிறப்பு இறப்பு தினம், வேறு ஏதேனும் குறிப்பிட்ட தினதத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

அந்த எண்ணம் மாற வேண்டும். அதனால் குழந்தைக்க்கு நல்லதல்ல. மேலும், சுக பிரசவவதற்கு எதுவாக ஆரம்ப சுகாதார மையங்களிலும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவும் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்