,

10, 12-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்கள் தொடர் தற்கொலை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு

By

நடப்பாண்டில் இருந்து பொதுத்தேர்வு முன்பே உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று, 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர் என அமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, 10, 12-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்கள் 11 அரசுப்பள்ளி மாணவர்கள் தொடர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நடப்பாண்டில் இருந்து பொதுத்தேர்வு முன்பே உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Dinasuvadu Media @2023