தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்று முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வந்த நிலையில்,தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.ஆனால்,கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது.இதனால், கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் 9-ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாகவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையிலும்,மேலும் கொரோனா 3 வது அலை வரும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருவதால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…