,

அரசின் திட்டங்கள் அனைத்தும் இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

By

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவ மாணவியருக்கும் வழங்கப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன்  ட்வீட்.

பள்ளி மாணவர்களுக்கு அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்னும் சில நாட்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மாணவியர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மாணவியர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது வரவேற்புக்குரியது. அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவ மாணவியருக்கும் வழங்கப்பட வேண்டும்.’ என  பதிவிட்டுள்ளார்.

Dinasuvadu Media @2023