Avadi : தொடரும் சோகம்… சென்னை அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தககி இருவர் பலி.!

Published by
மணிகண்டன்

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்கள் பயன்படுத்தப்படுவதும், அதில் எதிர்பாராவிதமாக உயிரிழப்புகள் நேர்வதும் தொடர்கதையாகவே உள்ளது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள், அரசின் அறிவுரைகள் என தொடர்ந்தாலும் இந்த சம்பவம் மட்டும் ஓய்ந்தபாடில்லை.

இன்று சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள மத்திய அரசின் ஓ.சி.எப் தொழிற்சாலை ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஒப்பந்த தூய்மை பணியாளர்களான மோசஸ் (45 வயது), தேவன் (வயது 46) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் கழிவுநீர் சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போது எதிர்பாராவிதமாக விஷவாயு தாக்கியுள்ளது. இதில் இரு தொழிலாளர்களும் மயக்கமடைந்த உடன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆவடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களை மீட்டனர்.

தொழிலாளர்களை மீட்டு அவர்களை ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும், 2 தொழிலாளர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தந்தை முகமது நபி வீசிய பந்து.. சிக்சருக்கு பறக்கவிட்ட மகன்! வைரலாகும் வீடியோ!

காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…

4 hours ago

அப்ரூவராக மாறும் ஆய்வாளர் ஸ்ரீதர்! சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…

5 hours ago

#HBDSuriya : “கருப்பன் வரான் வழி மறிக்காதே”..அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!

சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…

6 hours ago

குரூப் 4 தேர்வில் குளறுபடியா? விளக்கம் கொடுத்த TNPSC!

சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…

6 hours ago

“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!

டெல்லி :  இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…

7 hours ago

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

8 hours ago