,

அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்த நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர் ராமசந்திரன்..!

By

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமசந்திரன் தனது குடும்பத்துடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கடந்த செப்.5-ஆம் தேதி, தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் கிளாம்பால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் நல்லாசிரியர் விருதை பெற்றார். இந்த விருதினை அவர் தன்னுடைய பள்ளி சீருடை சென்று பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமசந்திரன் தனது குடும்பத்துடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

Dinasuvadu Media @2023