#BREAKING: அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகள் ரத்து!
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், தேர்தலின்போது அதிக வாகனங்கள் பயன்படுத்தியது மற்றும் அனுமதியின்றி கட்சி அலுவலகத்தை திறந்தது உள்ளிட்டவை தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் பங்கேற்றதற்காக அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டது என அமைச்சர் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் அமைச்சர் மீதான 3 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.