, ,

#Breaking : 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…! பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

By

10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு. 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2022-2023 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13.03.23 முதல் 03.04.23 வரையும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 14.03.23 முதல் 05.04.23 வரையும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 06.04.23 முதல் 20.04.23 வரையும் தேர்வு நடைபெறவுள்ளது.

இந்த பொதுத்தேர்வினை 12-ஆம் வகுப்பில் 8.80 லட்சம் மாணவர்களும், 11-ஆம் வகுப்பில் 8.50 லட்சம் மாணவர்களும், 10-ஆம் வகுப்பில் 10 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர்.

Dinasuvadu Media @2023